Tamilnadu

ஸ்டாலின் அரசு முடிவை எதிர்த்து அறிக்கை கொடுத்த வீரமணி.. நாவலர் பாவலர் என ஒப்பாரி.!

veeramani and stallin
veeramani and stallin

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரி கொண்டாட இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார் இது திமுக அரசின் முடிவாக பார்க்க படுகிறது.


இது திமுகவில் உள்ள இந்துக்களை திருப்தி படுத்த முடிவாக பார்க்க படும் நிலையில் திராவிட கழகத்தலைவர் வீரமணி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-

தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு அவர்கள் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்."இந்து அறநிலையத் துறை வரலாற்றில் முதல் முறையாக மகா சிவராத்திரியன்று 100-க்கு மேற்பட்ட ஆன்மிகக் கலைஞர்கள் இணைந்து மார்ச் 1 ஆம் தேதி மாலை 6 மணிமுதல் காலை 6 மணிவரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் சிவராத்திரி விழாவில் 40 ஆயிரம் பேர் பங்கேற்பர்.

எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு சிவாலயங்கள் அனைத்தும் மகாசிவராத்திரியன்று வண்ண விளக்குகளால் ஜொலிக்கும்" என்று விரிவாக செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் விளக்கியிருக்கிறார்.இந்து அறநிலையத் துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர் என்பது செய்தி.

இந்து அறநிலையத் துறை, அதன் அதிகாரிகள், அமைச்சர் போன்றவர்களின் பணி என்பது பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடுவதோ, செயல்படுவதோ அல்ல.கோவில் சொத்து, வரவு - செலவுகளைக் கண்காணிப்பதும், சரி பார்ப்பதும், நிர்வகிப்பதும் மட்டும் தான்.

நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள், அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, இந்து அறநிலையத் துறையும் அவர் பொறுப்பில் இருந்தது. சிதம்பரம் நடராஜன் கோவிலுக்கு நாவலர் சென்ற போது, தீட்சதர்கள் அவருக்கு அளித்த பிரசாதத்தை இந்தக் கையில் வாங்கி, அந்தக் கைவழியாக விலக்கிவிட்டார்.

அப்பொழுது ஆன்மிகவாதிகள் பெரிய அளவில் பிரச்சினையாக்கிய பொழுது, இந்து அறநிலையத் துறை அமைச்சர் பணி என்பது - ஆறு மரக்கால் அரிசி என்றால், அதைச் சரியாக அளந்து போடுகிறார்களா என்று கண்காணிப்பதே தவிர, பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடுவது இல்லை என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் - அமைச்சர் நாவலர்.

தந்தை பெரியார் "பலே, பலே நெடுஞ்செழியன்" என்று பாராட்டி அறிக்கை வெளியிட்டார் என்பதை நினைவுபடுத்துகிறோம். (விடுதலை, 16.4.1967).இந்து அறநிலையத் துறை அதற்குரிய பணிகளை மட்டும் செய்யட்டும் என்பதே நமது வேண்டுகோள்!

பார்ப்பனர்களைத் திருப்தி செய்வது என்பதற்காக விதிகளை மீறி பகுத்தறிவாளர்கள், மதச் சார்பற்றவர்களது மனதில் புண்ணை ஏற்படுத்தலாமா?அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சினையில் சிறப்பாக செயல்பட்ட அமைச்சர், இதில் முரணாக ஈடுபடலாமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் வீரமணி.

கேள்வி எழுப்பியுள்ளார் என்று கூறுவதை காட்டிலும் ஒப்பாரி வைத்துள்ளார் என்றே கூறவேண்டும் இந்து கோவில் வருமானத்தில் ஆட்சி நடத்தும் அரசாங்கம் இது கூட செய்ய முடியாதா? அப்படி ரோஷம் இருந்தால் கோவில் நிர்வாகத்தில் இருந்து தமிழக அரசு வெளியேறி தங்கள் திராவிட ஆதரவை தெரிவிக்கலாமே என்றும் நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

More Watch videos