India

அபிநந்தனுக்கு இந்திய இராணுவம் கொடுத்த தீபாவளி பரிசு! இப்போ வாங்கடா...!

abinandan
abinandan

இந்தியாவின் ரியல் ஹீரோ அபிநந்தன்  இந்திய விமானப்படை மூலம் குரூப் கேப்டனாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளார் , மேலும் அவர் விரைவில் தனது புதிய பதவிக்கு உடனடியாக பொறுப்பு ஏற்பார் என  அணி செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.


இந்திய விமானப்படை (IAF) இன்று (புதன்கிழமை) விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை குரூப் கேப்டன் பதவிக்கு உயர்த்தியது.  2019 பிப்ரவரியில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான வான்வழித் தாக்குதலில் அவர் ஆற்றிய பங்கிற்காக அபிநந்தனுக்கு "சௌர்ய சக்ரா" விருது வழங்கப்பட்டது.அபிநந்தன் வர்தமான் இந்திய விமான படை மூலம் குரூப் கேப்டனாக பதவி உயர்வு பெற அனுமதிக்கப்பட்டுள்ளார், மேலும் அவர் விரைவில் தனது புதிய பதவிக்கு வருவார் என்று ஆதாரங்கள் செய்தி நிறுவனமான ANI இடம் தெரிவித்தன.

விமான படையில் குரூப் கேப்டன் பதவி என்பது இந்திய ராணுவத்தில் கர்னலுக்கு சமமானவர்.  அபிநந்தன் MiG-21 போர் விமானம் அமெரிக்காவின் கண்டுபிடிப்பான F-16 ஐ வீழ்த்தினார், பல மடங்கு பாதுகாப்பு அதி நவீன தொழிநுட்பம் கொண்ட  F16 போர் விமானத்தை அமெரிக்காவிடம் இருந்து வாங்கி பாகிஸ்தான் பயன்படுத்தி வந்தது.

இந்திய  காஷ்மீரில் அவ்விமானம் வந்தபோது அபிநந்தன் பாகிஸ்தான் நாட்டின் விமானத்தை சுட்டு வீழ்த்தி, அபிநந்தனும்  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்தார். பின்னர் பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார் அபிநந்தன்.

 உடனடியாக அபிநந்தனை மீட்க இந்திய இராணுவம் தயாரானது அபிநந்தனுக்கு ஏதாவது ஒன்று நடந்தால் நிச்சயம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் அது பாகிஸ்தான் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத வகையில் இருக்கும் எனவும் இந்தியா சர்வதேச தொடர்புகள் மூலம் எச்சரிக்கை விடுக்க, பணிந்த பாகிஸ்தான் அபிநந்தனை இந்திய எல்லையில் ஒப்படைத்தது.

இதையடுத்து தற்போது அபிநந்தனுக்கு குரூப் காமண்டர் பதவி கொடுத்துள்ளது, முன்பு அபிநந்தன், உத்தரவிற்கு காத்து கொண்டு செயல்பட வேண்டும் தற்போது அவர் உத்தரவிடும் சூழலில் இருப்பதால் இந்தமுறை மறந்தும் பாகிஸ்தான் விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்தால்  பாகிஸ்தான் நிலை மோசம்தான்.

இப்போ வாங்கடா பாக்கலாம் என இந்திய விமானபடையில் பதவி உயர்வுடன் செயல்படவிள்ளார் அபிநந்தன் குறிப்பாக நாளை இந்தியா முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டவுள்ள சூழலில் அபிநந்தனுக்கு தீபாவளி பரிசாக பதவி உயர்வு கிடைத்துள்ளது.