தமிழகத்தை சேர்ந்த தனியார் ஊடகத்தில் டெல்லியின் செய்திகளை தொகுத்து வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருபவர் நிரஞ்சன் என்ற நிரஞ்சன் குமார் இவரது தந்தை திமுக உறுப்பினர் என்று கூறப்படுகிறது , பெரும்பாலான உச்ச நீதிமன்றம் தீர்ப்புகள், மத்திய அரசு நடவடிக்கைகள் என டெல்லியை மையப்படுத்தி அரசியல் எதிர்பார்ப்பு எழுந்த நேரத்தில் நிரஞ்சன் தனியார் தொலைக்காட்சியான புதிய தலைமுறையில் தகவல்களை சேகரித்து வழங்குவார்.
இந்நிலையில் இவர் நேற்று தமிழகத்தின் சார்பில் குடியரசு தினவிழாவில் கலந்துகொள்ள அனுப்பப்பட்ட அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்து விட்டதாகவும் குறிப்பாக வேலுநாச்சியார், வஉசி ஆகியோரை சர்வதேச தலைவர்களுக்கு யார் என்று தெரியாத காரணத்தால் அதிகாரிகள் நிரகாரித்ததாக தெரிவித்தார். இந்த சூழலில் நிரஞ்சன் தெரிவித்த தகவல் போலி என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
மத்திய அரசு நிரகாரித்ததாக நிரஞ்சன் கூறிய நிலையில் அணிவகுப்பு ஊர்த்திகளை மத்திய அரசு முடிவு செய்வதில்லை எனவும் பாதுகாப்பு கமிட்டி மட்டுமே முடிவு செய்வதாக விளக்கம் அளித்தது, இந்த விளக்கத்தில் இருந்தே நிரஞ்சன் பரப்பியது போலி தகவல் என்பது உறுதியானது, இவை தவிர்த்து நிரஞ்சன் தனது முகநூல் பக்கத்தில்..
குதிரையில் வேலுநாச்சியார் இருக்கும் படம் தமிழக ஊர்தியில் இடம்பெற்றிருக்கிறது.அதை பார்த்த மத்திய அரசு அதிகாரிகள் ஜான்சிராணிக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம் ஏன் அவரை உங்கள் ஊர்தியில் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என கேட்டுள்ளார்கள்சொல்லக்கூடாது என இருந்தேன்.சொல்லவைக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நிரஞ்சன் இதற்கு ஆதாரமாக எந்த ஒரு தகவலையும் கொடுக்கவில்லை, வழக்கம்போல் வாயில் வடை சுட்டு இருக்கிறார் என நெட்டிசன்கள் கிண்டல் அடிக்க தொடங்கியுள்ளனர், டெல்லியில் இருந்து உண்மை செய்திகளை சொல்லுவார் என்று பார்த்தால் போலி செய்திகளை பரப்புகிறாரே என்றுகிண்டல் அடித்து வருகின்றனர்.
பிளேட்டை மாற்றுவது ஒன்றும் நிரஞ்சனுக்கு புதிதல்ல இதற்கு முன்னர் தமிழகத்தில் வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையணை தமிழக காவல்துறை என்கவுண்டர் செய்தது.இந்த சம்பவம் வரவேற்பை பெற்றது இதனை வாழ்த்தி பதிவிட்ட நிரஞ்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் காஞ்சிபுரத்தில் துப்பாக்கி காட்டி கொள்ளையில் ஈடுப்பட்ட வடமாநில கொள்ளையன் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
டெல்லி,உபி,பீகார் போலீஸ்ன்னு நினைச்சுட்டாய்ங்க தமிழ்நாடு போலீஸ, ஆயிரம் விமர்சனம் இருக்கலாம்,ஆனா இதுல எல்லாம் கில்லி இப்போ எடுக்கிற நடவடிக்கையில இனி ஒரு பய வரக்கூடாது என பதிவிட்டு இருந்தார் உண்மை தான் என பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர் இந்த சூழலில்தான் நிரஞ்சனின் இரட்டை முகம் வெளிவந்தது, இதே போன்று உத்திர பிரதேசத்தில் என்கவுண்டர் சம்பவம் ஒன்று நடந்த போது இதே நிரஞ்சன் என்ன கூறினார் என பாஜகவினர் பகிர்ந்துள்ளனர்.
அதில் 8 போலீசை சுட்டு கொன்ற ரவுடி விகாஷ் தூபே மற்றும் அவனது கும்பலை கடந்த 2நாட்களில் சுட்டுக்கொன்றது உத்தரபிரதேஷ் போலீஸ் கேங்ஸ்டருக்கும், காவல்துறைக்கும் என்ன வித்தியாசம் இருக்கு! நீதிமன்றத்தை அருங்காட்சியகமாவும் சட்ட புத்தகத்தை அலமாரியுலும் வைத்து மூடிவிடலாம் என பதிவிட்டுள்ளார்.
அதாவது நீதிமன்றம், சட்டம் இருக்கையில் உத்திர பிரதேச காவல்துறை எப்படி சட்டத்தை கையில் எடுக்கலாம் ரவுடிக்கும் போலீசுக்கும் என்ன வித்தியாசம் என கேட்டுள்ளார், திமுக ஆட்சியில் போலீஸ் செய்தது சரி என பாராட்டியவர், பாஜக ஆட்சியில் போலீஸ் செய்த போது சட்டம் நீதிமன்றம் எதற்கு என கேட்டுள்ளார்.
இந்த இரு பதிவுகளையும் ஒன்றாக ஒப்பிட்டு பாஜகவினர் நிரஞ்சனை கலாய்த்து வருகின்றனர், என்னமா கூவுறாரு பாரு என்பன உட்பட பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன இந்த சூழலில் தன் பதிவு குறித்து நிரஞ்சன் விளக்கம் கொடுத்துள்ளார் அதில் விகாஷ்துபே ஒரு கேங்ஸ்டர்,பல ஆண்டாய் தேடப்பட்டு வந்தவன்.8காவல்துறையினரை கொலை செய்த பின் நிலைமை கைமீறவே அவனை கைது செய்து தங்கள் வாகனத்திலேயே அழைத்துவந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன் சுட்டுக்கொன்றது உபிபோலீஸ்,அதை தான் எல்லாரும் விமர்சித்தார்கள் இதை எப்படி ஒப்பிடுறாங்க என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஏன் நீதிமன்றம் சட்ட புத்தகம் எதற்கு என நிரஞ்சன் உத்திர பிரதேச போலீஸ் என்கவுண்டர் செய்த போது கேட்டது ஏன் என எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என நெட்டிசன்கள் மீண்டும் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர், எப்படி பிளேட்டை மாற்ற வேண்டும் என நிரஞ்சனிடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.
மொத்தத்தில் மெல்டிங் சரவணனை தொடர்ந்து தற்போது பிளேட்டை மாற்றுவதில் வல்லவர் என பட்டம் பெற்றுள்ளார் டெல்லி சிறப்பு செய்தியாளர் நிரஞ்சன் என்ற நிரஞ்சன் குமார். முன்பு தமிழக போலீஸ் உத்திர பிரதேச போலீஸ் இருவரையும் ஒப்பிட்ட போது சிக்கிய நிரஞ்சன் இரண்டாவது முறையாக குடியரசு தினவிழா அணிவகுப்பில் ஊர்தியை மத்தியஅரசு நிரகாரித்ததாக போலி செய்தியை பரப்பி சிக்கியுள்ளார்.