பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று (திங்கட்கிழமை) கரூர் சென்று இருந்தார் அவருக்கு கரூர் பாஜக மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .
தொடர்ந்து மதுரை பைபாஸ் சாலை, முருகன் ரெசிடென்சி அருகில் கரூர் மாவட்ட பா.ஜ.க. அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி மாலை 3 மணிக்கு நடைபெற்றது இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்
இந்நிகழ்ச்சியில் மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணி உள்பட பா.ஜ.க. கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர், கரூர் அண்ணாமலையின் சொந்த ஊர் என்பதை தாண்டி அங்கு கூடிய இளைஞர் பட்டாளம் கரூரில் உள்ள மற்ற கட்சியினரை மிரள செய்தது, அண்ணாமலை கரூர் வந்ததும் அவரை வரவேற்க இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரே நேரத்தில் குவிந்ததால் அலுவலகத்தை நோக்கி நகர முடியாத நிலையில் அண்ணாமலை ஸ்தம்பித்து போனார்.
பாஜக கரூர் பகுதியில் அசுர வளர்ச்சி அடைந்து வருவதாக ஏற்கனவே பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது, இந்த சூழலில் நிகழ்ச்சி நடைபெறுவதை குறிக்க கரூர் முழுவதும் பாஜகவினர் கொடி கம்பங்களை நட்டு இருந்தனர் அவை ஒன்றன் பின்பு ஒன்றாக பிடிங்கி கிடைப்பதை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
யார் இந்த வேலையை செய்தார்கள் என தேடி செல்லும் போது ஒரு காரில் சென்ற கும்பல் இதனை செய்தது கண்டறியப்பட்டது அவர்களை பிடித்து சதர்ம அடி கொடுத்தனர் அடித்த அடி தாங்காமல் காருக்குள் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில்
திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகில் பாஜகமாவட்ட கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் இந்தசம்பவம் நிகழ்ந்துள்ளது.இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார்காரையும் அதில் இருந்தவர்களையும் பத்திரமாக மீட்டு விசாரணைக்காக போலீஸ் நிலையம்அழைத்து சென்றனர். முதல்கட்ட விசாரணையில் காரில் இருந்தவர்கள் பள்ளபட்டி நகராட்சிஅதிகாரிகள் என்றும், அவர்கள் மது போதையில் கொடி கம்பங்களை சாய்த்து விட்டு வந்ததும் தெரிய வந்துள்ளதுஎன தெரிவித்தனர்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த பாஜகவினர் இது செந்தில் பாலாஜியின் வேலையாக இருக்கலாம் உடனடியாக இந்த செயலை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் எனவும் மேலும் உரிய விசாரணை நடத்த படவேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர், காருக்குள் வைத்து தர்ம அடி வாங்கிய ஒருவர் ஐயோ அம்மா என கதறிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.