தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற முடிவுகள் வெளியாகி புதிய ஆட்சி அமைந்துள்ளது அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சியை மீண்டும் தக்கவைத்து கொண்டுள்ளது, மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு மூன்று MLA-களை பெற்ற பாஜக இந்தமுறை 77 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று எதிர்க்கட்சியாக மாறியுள்ளது.
தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை இழந்துள்ளது, எதிர் கட்சியாக இருந்த திமுக ஆட்சியை பிடித்துள்ளது, அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது, கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை பிடித்துள்ளது, இந்நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி தோல்விக்கு காரணம் என்ன என்று ஆராய கட்சி நபர்கள் மற்றும் ஏஜென்சிகள் மூலம் ரிப்போர்ட் பெற கட்சி மேலிடம் முடிவு செய்தது.
இந்த குழுவில் தமிழகத்தை சேர்ந்த எந்த நபர்களும் இடம்பெறவில்லை சொந்த விருப்பு வெறுப்பை தவிர்த்து சரியான ரிசல்ட் கிடைக்க வேண்டும் என்பதால் இந்த முடிவை மேலிடம் எடுத்துள்ளாத கூறப்படுகிறது, அக்குழு கொடுத்த அறிக்கையில் தமிழக பாஜகவை சேர்ந்த சில முக்கிய நபர்கள் மீது கடும் அதிருப்தியில் தலைமை இருப்பதாகவும், அவர்கள் விரைவில் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
மாவட்ட பாஜக தலைவர்கள் பலர் கட்சியை வளர்ப்பதற்கு பதில் கூட்டணி கட்சி வேட்பாளர்களிடம் நட்பு பாராட்டியதுடன், சொந்த கட்சியை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடாததும், கண்டறியப்பட்டுள்ளது, அது மட்டுமின்றி முக்கிய தலைவர்கள் பலர் ஒரே தொகுதியில் மீண்டும் மீண்டும் போட்டியிட்டுக்கிறார்களே தவிர வெற்றி பெறுவதற்கோ அல்லது தன்னை தாண்டி கட்சியை வளர்ப்பதற்க்கோ முயலவில்லை எனவும் அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை தவிர்த்து கூட்டணி பேச்சு வார்த்தையில் வெற்றி வாய்ப்பு அற்ற தொகுதிகளை தேர்வு செய்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளதாம், விரைவில் பாஜக தேசிய. தலைவர் தமிழகம் வர இருப்பதாகவும், அவரது வருகைக்கு பின்பு கட்சியில் முக்கிய நிர்வாகிகள் பலர் மீது நடவடிக்கை பாயும் எனவும் அதில் முக்கிய பொறுப்பில் உள்ள நபர்களின் பெயரும் இருப்பதாக கூறப்படுகிறது.
இவை தவிர்த்து தேர்தலில் என்ன நடந்தது என்பது குறித்து புகாராக தமிழக விவகாரத்தை கவனிக்கும் நபர்களுக்கு அனுப்பியுள்ளனராம், இதன் அடிப்படையில் தமிழக பாஜகவில் மாவட்டம் மற்றும் மாநில அளவில் பல்வேறு மாற்றங்கள் அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டாவின் வருகைக்கு பிறகு அரங்கேறும் என்று கூறப்படுகிறது.