சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கின்ற மாநிலத்தின் முதல்வரே சட்டம் ஒழுங்கை சீர்க்குழைத்த சம்பவம் நேற்று மேற்கு வங்கத்தில் அரங்கேறியது. மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி அமைச்சரவையில் பங்கேற்ற இரண்டு அமைச்சர்கள் மற்றும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை ஊழல் வழக்கில் சிபிஐ கைது செய்தது.
இதனை எதிர்த்து மமதா நேரடியாக சிபிஐ அலுவலகம் சென்று தர்ணா நடத்தினார், மாநில முதல்வர் ஒருவர் சட்டம் ஒழுங்கை மறந்து போராட்டத்தில் ஈடுபட்டது கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது இந்த நிலையில் சிபிஐ அலுவலகம், திரிணமூல் கட்சியினரால் தாக்கப்பட்டது, இதை கண்டித்து மேற்கு வங்க ஆளுநர் கண்டனம் தெரிவித்தார்.
இந்த சூழலில் மேற்கு வங்க உயர் நீதிமன்றம் தனது கண்டனத்தை பதிவு செய்ததுடன், கலவர சூழலை கருத்தில் கொண்டும், விசாரணை சுமுகமாக நடைபெறாது என கருத்தில் கொண்டு வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றலாம் என்று அதிரடியாக தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க தலைமை நீதிபதி ராஜேஷ் பின்டால் மற்றும் அரிஜித் பேனர்ஜி அளித்த தீர்ப்பின் தமிழாக்கம்சிபிஐ அலுவலுக வாசலில் ஒரு மாநில முதல்வர் அவரின் ஆதரவாளர்களுடன் தர்ணாவில் அமரும் ஒரு அசாதாராண நிலையை பார்க்கிறோம்.
சிபிஐ இந்த வழக்கை விசாரித்து சார்ஜ் ஷீட் போட்டவர்களில் டிஎம்சி கட்சியின் மூத்த நிர்வாகிகளும் இருக்கிறார்கள்.அது தவிர, குற்றம் சாட்டப்படவர்களுக்கு ஆதரவாக மாநில சட்ட அமைச்சர் கோர்ட்டுக்கே தனது 2000-3000 ஆதரவாளர்களுடன் வந்திருப்பதையும் இந்த கோர்ட் கவனத்தில் கொள்கிறது.
இந்த அசாதாரண நிலையை கருத்தில் கொண்டு இந்திய சாலிட்டிசர் ஜெனரல் இந்த வழக்கை வேறு மாநில கோர்ட்டுக்கு மாற்ற வழிமுறைகளை ஆராய அனைத்து உரிமைகளும் இருப்பதாக இந்த கோர்ட் கருதுகிறது. இந்த கோர்ட்டின் முன் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட பெயில் ரத்தாகிறது.
என தெரிவித்துள்ளது, விரைவில் இந்த வழக்கு வேறு மாநிலத்திற்கு மாற்றப்படும் சூழலில், மம்தா பானர்ஜியின் கட்சியை சேர்ந்த பலர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது, நேரடியாக களத்திற்கு சென்று ஹீரோயிசம் காட்டிய மம்தா இப்போது வழக்கை வேறு மாநிலத்திற்கு கொண்டு சென்று தன் தலையில் தானே மண்ணள்ளி போட்டு கொண்டுள்ளார்.