5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிவருகின்றன பஞ்சாப் மாநிலத்தை தவிர உத்திர பிரதேசம், உத்ரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க இருக்கிறது இதில் காங்கிரஸ் எந்த மாநிலங்களிலும் வெற்றி பெறவில்லை எந்த வெற்றியையும் பதிவு செய்யாமல் படு தோல்வி அடைந்துள்ளது காங்கிரஸ்.
இது ஒரு புறம் என்றால் தமிழகத்தில் பத்திரிகையாளர் பணியை மேற்கொள்ளும் செந்தில் தீவிரமாக காங்கிரஸ், அகிலேஷ் யாதவ் போன்ற கட்சிகளுக்கு எப்படி பாஜகவை வீழ்த்த வேண்டும் என அறிவுரை வழங்கினார், ஒரு கட்டம் மேலே சென்று நேற்றைய தினம் பாஜக வெற்றி பெற வாய்ப்புகள் இல்லை எனவும் ஒரு வேலை அகிலேஷ் வெற்றிபெற வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் செந்தில் இதற்கு முன்னர் யூடுப் சேனலில் பத்திரிகை துறையை சார்ந்தவர் என்பதையும் கடந்து ஒருமையிலும் பல்வேறு விவாதங்களில் பேசியுள்ளார், தீவிரமாக பாஜக எதிர்ப்பை கையில் எடுத்து பேசிய செந்திலுக்கு தற்போது 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று இருப்பது தலையில் விழுந்த இடியாக அமைந்துள்ளது.
செந்திலின் கடந்த கால பேச்சுக்களை ஒப்பிட்டு இப்போது பாஜகவினர் கடுமையாக செந்திலை அவர் முன்பு எவ்வாறு பேசினாரோ அதே பாணியில் சமூக வலைத்தளங்களில் கிழி கிழி என கிழித்து வருகின்றனர், பாஜக வெற்றி பெற்று இருக்கிறது இப்போது செந்தில் என்ன செய்ய போகிறார் எனவும் பல்வேறு நபர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது ஒரு புறம் என்றால் செந்திலுக்கு நான் ஏன் பாஜகவை ஆதரிக்கிறேன் என மாரிதாஸ் எழுதிய புத்தகத்தை அனுப்ப இருப்பதாகவும் இதை படித்துவிட்டதாவது செந்தில் திருந்தட்டும் என்கின்றனர் ஒரு தரப்பு, இன்னொரு தரப்பு தூக்கு கயிறை அனுப்ப போவதாகவும் தேர்தல் முடிவுகளை பார்த்துவிட்டு என்ன முடிவு எடுக்க வேண்டும் என செந்தில் முடிவு செய்து கொள்ளட்டும் என நக்கலாக கருத்து தெரிவித்துள்ளனர்.
மொத்தத்தில் செந்தில் போன்ற பலரது தலையில் மண்ணள்ளி போட்டு இருக்கிறது பாஜகவின் இமாலய வெற்றி இதுவே 2024 நாடாளுமன்ற பொது தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால் பிரதமர் கனவில் இருந்த பலர் அமைதியாகிவிட்டனர்.