Tamilnadu

உங்க கருத்து கணிப்பில் "தீயை" வைக்க ட்விட்டரில் சிக்கிய தமிழக பத்திரிகையாளர்...!

Bjp
Bjp

உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(மார்ச்.10) காலை 8 மணிக்கு தொடங்கியது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறது. மீதமுள்ள உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய நான்கு மாநிலங்களிலும் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.


உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பாஜகவுக்கு மக்கள் வாக்குகளை அள்ளி வழங்கியதற்கு இந்து, முஸ்லிம் என்றெல்லாம் பாரபட்சமில்லாமல் அனைவருக்குமான வளர்ச்சித் திட்டங்களை பாஜக செயல்படுத்தியதே காரணம் என்று பாஜக எம்.பி. சதீஷ் மஹனா தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், உத்தராகண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. உத்தரப் பிரதேசத்திற்கு ஏழு கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் மணிப்பூர் மாநிலத்திற்கு இரு கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது.

இந்த 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக 272 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் 120 இடங்களில் சமாஜ்வாதி முன்னிலை பெற்றுள்ளது. நிலைமை இப்படி இருக்க சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தை சேர்ந்த தேவேந்திரன் பழனிசாமி எனும் பத்திரிகையாளர் சில கணிப்புகளை வெளியிட்டார்.

அதாவது அவரது ட்விட்டர் பக்கத்தில் எனது கணிப்பு... பஞ்சாப், உத்ராகண்ட், கோவா, மனிப்பூர் நான்கு மாநிலத்திலும் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் இருக்கும் என தெரிவித்தார் ஆனால் முடிவுகள் படி மேற்கண்ட 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் படு தோல்வி அடைந்துள்ளது, பஞ்சாப்பில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது.

இதையடுத்து உங்கள் கணிப்பில் தீயை வைக்க என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர், கணிப்புகள் ஓரளவு தவறலாம், மொத்தமாக மாறினால் அது கணிப்பு இல்லை குருட்டு தனம் என கிண்டல் அடித்து வருகின்றனர் நெட்டிசன்கள் இவர்களை போன்றவர்கள்தான் தமிழகத்தில் பத்திரிகையாளராக இருக்கிறார்கள் எனவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.