Politics

படித்து படித்து சொன்னனே கேட்டியா தலையில் அடுத்துக்கொண்ட நேரு. ... மகனுக்கு வந்து இறங்கியது சிறை எண் 1007!

knneru
knneru

நாடாளுமன்றம் போனோமா வந்தாமா என இரு அதை விட்டு மத்திய அமைச்சர்களை வம்புக்கு இழுக்காதே என மகனுக்கு பலமுறை அறிவுரை கூறி இருந்தார் நேரு ஆனால் அவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் கெத்து காட்டுவதாக நினைத்து நாடாளுமன்றத்தில் வம்புக்கு இழுத்து இன்று திகார் சிறை எண் 1007 வரும் நிலை உண்டாகி இருக்கிறது. 


தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அவரது மகனும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி எம்.பியுமான அருண் நேரு மற்றும் நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான சென்னை உள்பட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை 3 நாட்களாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இது தொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ​“சென்னை, திருச்சி மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில்,பல்வேறு குற்றவியல் ஆவணங்கள், டிஜிட்டல் பதிவுகள் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. அமைச்சர் நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் மற்றும் அருண் நேரு ஆகியோர் மட்டுமின்றி, அமைச்சர் நேரு பதவி வகிக்கும் நகராட்சி நிர்வாகத் துறையிலும் மோசடி நடந்துள்ளது.

நகராட்சி நிர்வாகம் மர்றும் குடிநீர் வழங்கல் துறையில் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கும், பணியிடமாற்றம் செய்வதற்கும் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதேபோல், டெண்டர்களைப் பெறுவதற்காக முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட கமிஷன் தொகைகளைப் பெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. திட்டமிட்ட நோக்கங்களுக்காக பெருமளவில் ஹவாலா பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் எப்போது வேண்டுமானாலும் நேரு மகன் கைது செய்யப்படலாம் எனவும் திகார் சிறை எண் 1007 ஒதுக்கப்படலாம் என டெல்லியில் இருந்து பரவும் தகவல் ஒட்டு மொத்த நேரு குடும்பத்தையும் அதிர செய்து இருக்கிறது.