
நேற்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷா வருகை மற்றும் என்ன நடக்க போகிறது என்பதை மணிக்கு ஒரு முறை முதல்வர் ஸ்டாலின் நேரடியாக மாநில உளவுத்துறை மூலம் கேட்டு வந்ததுடன் நேரலையில் ஊடகங்கள் மூலமும் செய்தியை பார்த்து இருந்தார் ஒரு கட்டத்தில் மேடையில் NDA ALLIANCE என இருந்த போர்டு மாற்றப்பட்டு தமிழக பாஜக என போர்டு வைக்கப்பட்ட போது அப்பாடா என முதல்வர் ஸ்டாலின் மூச்சு விட்டு நிம்மதியாக இருந்தாராம்.
தொல்லை தந்த அண்ணாமலையும் இனி மாநில பொறுப்பில் இல்லை அதே நேரத்திக் பாஜகவிற்கு தமிழகத்தில் வலுவான கூட்டணியும் இல்லை எனவே ரூட் clear என கணக்கு போட்டு இருந்து இருக்கிறார் ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்தது தான் இப்போது மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது அதிமுக பாஜக கூட்டணி உறுதியானது முதல்வர் ஸ்டாலின் கனவை உடைத்து இருக்கிறது இது ஒரு புறம் என்றால் ஏன் ஒரு வருடம் முன்பே கூட்டணி அமைக்க வேண்டிய காரணம் என்ன என்பது குறித்து விரிவாக முதல்வர் ஸ்டாலினுக்கு விளக்கப்பட்டு இருக்கிறது.
மாநிலத்தில் ஒரு கட்சி ஆட்சியில் அமரவும் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கும் IAS அதிகாரிகள் மற்றும் IPS அதிகாரிகள் தயவு என்பது மிக முக்கியம் குறிப்பாக ஆளும் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என தீர்க்கமாக அதிகாரிகள் நம்பினால் மட்டுமே பல விஷயங்களில் கண்டும் காணாமல் இருப்பார்கள் ஆனால் ஆளும் கட்சி ஆட்சிக்கு வராது அல்லது இழு பறி என அவர்கள் கருதி விட்டால் அன்றைய தினமே ஆளும் கட்சி கதி முடிந்தது இந்த நிலையில் தான் வலுவாக கூட்டணி அமைந்த காரணத்தால் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை பகைக்க இனி எந்த அதிகாரிகளும் முன் வர மாட்டார்கள் இனி திமுக அமைச்சர்கள் பலர் கைது செய்யப்படலாம் எனவும் அவர்களுக்கு எதிரான பல ஊழல் குற்றசாட்டு ஆதாரங்கள் வெளியாகலாம் என அடித்து கூறு கின்றனர் டெல்லி வட்டாரங்கள்.
அண்ணாமலை நேற்றைய தினம் ஸ்மார்ட் மீட்டர் ஊழல் குறித்து விரைவில் அதிர்ச்சியான விஷயம் வெளிவரும் என குறிப்பிட்டு உதயநிதி மற்றும் செந்தில்பாலாஜி பெயரை குறிப்பிட்டு ட்விட் செய்த நிலையில் இப்போது அடுத்தடுத்து திமுகவில் யார் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் திமுக கூடாரத்தை ஆட்டம் காண செய்துள்ளது அடுத்த வீடியோவில் அண்ணாமலை விஷயத்தில் பிரதமர் சொன்ன இரண்டு விஷயம் என்ன செய்ய போகிறது டெல்லி என விவரத்தை பார்க்கலாம் மறக்காமல் tnnews24 பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.