Technology

#BREAKING கேரளாவை போன்று தமிழகத்தில் முடக்கப்பட போகின்ற ஊடகம் எது? என்ன நடக்கிறது?

Network
Network

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கேரளாவை சேர்ந்த இரண்டு செய்தி சேனல்கள் 48 மணி நேரம் ஒளிபரப்பு செய்ய தடைவிதிக்கப்பட்டது, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டில்லியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் 53 பேர் பலியாகினர். வீடுகள், கடைகள் கொளுத்தப்பட்டன. இதனை ஒளிபரப்பிய கேரள டிவி சேனல்களான மீடியா ஒன் மற்றும் ஏசியா நெட் செய்தி சேனல்களுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், 48 மணி நேரம் தடை விதித்தது.


தடை விதிக்க இரண்டு முக்கிய காரணம் ஒன்று இந்த இரு டிவி சேனல்களும், வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதலை ஒளிபரப்பியதுடன், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவாக ஒளிபரப்பு செய்தனர், வேண்டுமென்றே சிஏஏ சட்டத்தை ஆதரித்து போராட்டம் நடத்தியவர்கள் வன்முறை நடத்தியதாக மட்டும் ஒளிபரப்பியதாக.,

எழுந்த குற்றசாட்டு அடிப்படையில் இரண்டு நிறுவனத்திற்கும் 48 மணி நேர தடை விதித்தது, அதே போன்று தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய ஊடகங்கள் தொடர்ந்து ஒரு தரப்பிற்கு எதிராக போலியான தகவலை திரித்து வெளியிட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து அனைத்து முக்கிய தகவல்களையும் சேகரித்து புகார் அளிக்க தமிழகத்தில் முக்கிய அரசியல் வாதி ஒருவர் டெல்லி சென்று துறை சார்ந்த அதிகாரிகளை சந்திக்க இருக்கிறாராம், தற்போதைய சூழலில் தமிககத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களை சந்தித்து இது குறித்து முழுமையாக ஆலோசனை நடத்தி முன்னாள் அரசு அதிகாரியான அந்த அரசியல் வாதி.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தவறான ப்ரொபோகேண்டா செய்திகள் குறித்து பட்டியலை அளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது, அதில் ஒரு ஊடகம் தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக வந்த மக்கள் முடிவு குறித்த வாக்கெடுப்பை நீக்கியது உட்பட பல தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

விரைவில் இதுகுறித்து சம்பந்தபட்ட மத்திய அரசு நிறுவனங்கள் ஆலோசனை செய்து குற்றசாட்டு உறுதியாகும் பட்சத்தில் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.

More news from tnnews24