Tamilnadu

தரமான சம்பவத்தை செய்யப்போகும் இயக்குநர் மோகன் ஜி !

Moham ji
Moham ji

சினித்துறையை பொறுத்தவரையில் 3 மணி நேர படத்தை மக்கள் மத்தியில் எப்படி வியாபாரமாக மாற்ற வேண்டும் என்பதில் ட்ரிக்ஸ் அறிந்தவர்கள் வெற்றியாளர்கள் என்றே சொல்லலாம். தமிழகத்தைப் பொறுத்தவரையில் இயக்குநர்கள் பலரும் பலவிதமான படங்கள் எடுத்தாலும், ஒரு சில படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் பேசப்படும். அந்த வகையில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் படங்களை பரவலாக மக்கள் கொண்டாடுகின்றனர். 


அதற்கு உதாரணமாக.. திரௌபதி, ருத்ரதாண்டவம், ஜெய்பீம் என சொல்லலாம். அதேவேளையில், யாரையும் புண்படுத்தாமல் உண்மை சம்பவங்களை தழுவி படம் எடுப்பது ஒரு கலை. அதே வேளையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை புண்படுத்தி படமெடுத்து அதன் மூலம் வியாபாரம் அடைவது மற்றொரு வகை என்கின்றனர் கோலிவுட் விமர்சகர்கள். சமீபத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தினரை காயப்படுத்தியதாக பெரும் பிரச்சனை வெடித்து, இன்றளவும் சென்று கொண்டிருக்கின்றது. இதற்கிடையில் ஓய்வெடுப்பதற்காக நடிகர் சூர்யா துபாய் சென்றுவிட்டார். அவர் நிம்மதியாக ஓய்வு எடுத்தாலும் இங்கு வன்னியர்கள் புண்பட்டு இருக்கின்றனர் என்கின்றனர் அவர்கள் தரப்பு. 

மேலும் சூர்யாவின் அடுத்த படமாக "எதற்கும் துணிந்தவன்" குறித்த செய்தியும் வெளிவந்தது. இப்படியான நிலைமையில் இதற்கு தக்க பதிலடி கொடுக்க யாரால் முடியும் என யோசித்து பலரும் இயக்குனர் மோகன்ஜி- யை தொடர்புகொண்டு கோரிக்கை வைக்கின்றனரனராம். மேலும் ருத்ரதாண்டவம் படத்திலும் டாக்டர் அம்பேத்கர் படத்தை பயன்படுத்தியது குறித்து விமர்சனம் எழுந்த நிலையில், அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக மோகன் ஜி விளக்கம் அளித்தார்.அப்போது, டாக்டர் அம்பேத்கர் படத்தை பயன்படுத்தி எப்படி எல்லாம் அரசியல் செய்கிறார்கள் என்பதைத் தான் படமாக்கி உள்ளேன்" என்று விளக்கம் அளித்தார். 

மேலும் ஒரு நேர்காணலில், அடுத்த படம் சிதம்பரத்தை அடிப்படையாகக் கொண்டது என தெரிவித்து இருக்கும் அதே நேரத்தில், நடிகர் சிம்புவை வைத்து படம் எடுக்க விருப்பம் என்றும் குறிப்பிட்டு இருந்தார். அந்த வகையில் பார்க்கும் போது மோகன் ஜி-யின் அடுத்த படத்தில் நடிகர் சிம்பு இடம் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. மேலும் சிதம்பரத்தை அடிப்படையாகக் கொண்ட படம் தானா என்றும் தெரியவில்லை. ஆகமொத்தத்தில் மோகன்ஜி எடுக்கப்போகும் அடுத்த படத்தில் மக்கள் எதிர்பார்க்கும்  தரமான சம்பவம் காத்திருக்கிறது என்கின்றனர் கோலிவுட் வட்டாரங்கள்.

மிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.