
கார்ட்டூனிஸ்ட் வர்மா எடுத்துள்ள PCR என்ற குறும்படம் தற்போது வைரலாக பேசப்பட்டது வருகிறது. அப்படி அதில் என்ன சொல்லி இருக்காரு இயக்குனர் வர்மா தெரியுமா?வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்( PCR)
PCR என்பது இந்தியாவில் பட்டியல் இன மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகவும், அச்சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகள், துன்புறுத்தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தருவதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.
ஆனால் நம் கண் முன் நடப்பது அப்படியா ? உண்மையில் அந்த சட்டம் முறையாக தான் பயன்படுத்தப்படுகிறதா? என்றால் பல கோடி கேள்விகளுடன் மக்கள் ஏக்கத்துடன் பார்க்கின்றனர். ஒரு சட்டம் யாருக்காக, எதற்காக சாதகமாக கொண்டு வந்தார்களோ அதனை தவறாக பயன்படுத்தும் முறையை மட்டும் தெளிவாக தெரிந்துக்கொண்டு அதற்கேற்றவாறு சந்தர்ப்ப சூழ்நிலையை தவறாக பயன்படுத்தும் நபர்கள் ஏராளம் என்பதை தான் இந்த குறும்படத்தின் மூலம் தெளிவாக காட்டப்பட்டு உள்ளது.
முதல் காட்சி :துணி தேய்த்து கொடுப்பவரிடம், டிசைன் டிசைன்னா ஆடையில் ஸ்டார் போட்டு தர வேண்டும் என ஒரு நபர் கேட்க, தெரியாது என பதில் அளிக்கிறார் துணி தேய்ப்பவர். பிறகு இருவருக்கும் வாக்குவாதம் முட்டவே அவருடைய தேய்க்கும் இயந்திரத்தை தூக்கி போட்டு உடைத்தது மட்டுமல்லாமல், காவல் நிலையத்தில் PCR பிரிவில், துணி தேய்ப்பவர் மீது வழக்கு பதியப்படுகிறது.
இரண்டாவது காட்சி : முடி திருத்தம் செய்யும் கடையில் ஒருவர், வித விதமான முறையை சொல்லி, ஒரு கோடு, ரெண்டு ஸ்டார் என தன் தலையில் டிசைன் செய்ய சொல்கிறார். கடைக்காரரோ எனக்கு தெரியாதுப்பா, என்னால் சாதாரணமாக மட்டுமே முடி திருத்தம் செய்ய முடியும் என்கிறார்... ஆனால் அவர் மீதும் பாய்கிறது PCR .
பாதிக்கப்பட்ட இருவரும் காவல் நிலையத்தில் அமர்ந்துகொண்டு, இவர்களுக்கு அடுத்தபடியாக வந்து அமர்ந்த ஒரு குற்றவாளியிடம் தங்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை விளக்குகின்றனர். இதுதான் கதையின் சுருக்கம். இந்த குறும்படத்தை யூடியூப் பக்கத்தில் பார்க்கும் மக்கள் தங்களது ஆதரவு பதிவுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நீங்களே இந்த குறும்படத்தை பாருங்களேன்...