Tamilnadu

"நீட்" விடுங்க FMGE தெரியுமா? ஊடகத்திற்கு சிறந்த டாபிக் அடித்து நொறுக்கிய தேன்மொழி!

NEET exam
NEET exam

நீட் தேர்வு குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடத்தி நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என தமிழக அரசு முடிவு எடுத்திருக்கும் சூழலில் மீண்டும் நீட் குறித்த பேச்சுக்கள் அதிகரித்துள்ளன, இந்தசூழலில் பத்திரிகையாளர் தேன்மொழி எழில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார் அது பின்வருமாறு :- 


NEET தேர்வு பற்றி பேசும் போது FMGE (Foreign Medical Graduates Examination) பற்றியும் தெரிந்துகொள்வது நல்லது தான். காரணம் எத்தனை பேருக்கு இதை பற்றி தெரியும் என்பது அவரவருக்கு தான் தெரியும்.NEET தேர்வு பற்றி பேசும் போது மாணவர்களின் மருத்துவ கனவு சிதைந்து விடுகிறது..வாழ்க்கை கேள்விக்குறியாகிறது என்றெல்லாம் குறிப்பிடும் போது..... வெளிநாட்டில் மருத்துவ படிப்பு முடித்து திரும்பிய மாணவர்களின் நிலை பற்றி யாராவது விவரமா பேசி இருக்காங்களா?

இங்கு மருத்துவ சீட் பெற முடியாதவர்கள் ரஷ்யா, சைனா, ஜார்ஜியா, உக்ரைன், பிலிப்பைன்ஸ், செயின்ட் லூசியா, கயானா, நேபாளம், கஜகஸ்தான், பங்களாதேஷ், கிர்கிஸ்தான், ஆர்மேனியா  உள்ளிட்ட பல  நாடுகளில் மருத்துவம் பயில்கின்றனர். படிப்பு முடித்து இந்தியா திருப்பி ஒரு மருத்துவராக பணியாற்ற FMGE தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.  இந்த தேர்வில் எத்தனை பேர் தேர்ச்சி பெற முடியாமல், வீட்டில் சும்மா இருக்கின்றார்கள் என்பது  பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் நன்கு தெரியும். உதாரணத்திற்கு ... 2015-16 ஜூன் மாதம் நடந்த FMGE தேர்வை 5863 பேர் எழுதினார்கள். அதில் தேறியவர்கள் 10.4 சதவிகிதம் பேர். அப்படி என்றால் மற்றவர்களின் நிலைமை தான் என்ன? சென்ற ஆண்டு அவசர  ஆத்திரத்திற்கு வேண்டும் என்பதால் 80 பேருக்கு ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்ற 80 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது (அதாவது கொரோனா தயவால்) பிறகு அதுல ஏகப்பட்ட பிரச்சனை.

நிலைமை இப்படி இருக்கும் போது, நீட் தேர்வால் மருத்துவ சீட் வாங்க முடியல என்பது ஒரு பக்கம்..... வெளிநாட்டில் மருத்துவம் படித்தும் மருத்துவராக பணியாற்ற முடியாத நிலை மறுபக்கம்....இருவருமே மாணவ செல்வங்கள் தானே?FMGE தேர்வு தகுதி மருத்துவராக அங்கீகாரம் கொடுப்பதற்கு என்றால், NEET தேர்வு மருத்துவம் படிக்கவே அங்கீகாரம் கொடுப்பது தானே. இந்த இரண்டிற்கும் நடுவே இருப்பது ஒரு பொது ஒற்றுமை தேர்வு மட்டுமே ( NEET VS FMGE) மற்றும் மருத்துவ  மாணவர்கள் என்பது தான்.இது பற்றி முழுமையாக அறிதல் புரிதல் இல்லாமல் சிக்கி தவிப்பது என்னமோ மாணவர்களும் பெற்றோர்களும் தான் 

எனவே தற்போதைய சில நாட்களில் இது போன்ற முக்கியமான விஷயங்களை மக்களுக்கு எடுத்துரைப்பதில் ,ஊடகத்தின் கடமை உள்ளது என்பதை சுட்டிக்காட்டி, தொலைக்காட்சி விவாதத்திற்கு இப்போதைக்கு இது மிக முக்கியமான டாஃபிக் என்பதை பரிந்துரைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார் தேன்மொழி எழில்.