Tamilnadu

திட்டம் மிக துல்லியமாக இடப்பட்டு இருக்கிறது எப்படி தப்பினார் பிரதமர் ஆனந்த் வெங்கட் பகிர்ந்த பதிவு!

modi
modi

ஆனந்த் வெங்கட் என்பவர் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் பாதுகாப்பின் போது நடந்தது என்ன என தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார் அவர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு :-திட்டம் மிகத் துல்லியமாக  இடப்பட்டிருந்தது. அக்காலத்திலேயே மாவீரன் பகத்சிங் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் வேண்டாம் என்று அமைதி காத்த கட்சி காங்கிரஸ்.  சுதந்திரம் கிடைத்த பின்னும் உத்தம் சிங் அவர்களின் சாம்பலை திருப்பிக்கொண்டு வராமல் தாமதம் செய்தது காங்கிரஸ். லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் மரணத்திற்கு காங்கிரஸ்தான் காரணம் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன.  கடைசி வரை அவருடைய பிரேத பரிசோதனை செய்யப்படவே இல்லை.   இத்தனைக்கும் ரஷ்யா அதை செய்து தருகிறோம் என்று சொல்லியும் கூட இந்திரா காந்தி மறுத்து விட்டார். அதற்கான ஆதாரங்கள் The Tashkent Files படத்தில் வெட்டவெளிச்சம் ஆக்கப்பட்டன.  


இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது  ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள்.  குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என்று பல கொலைகள்.  பலர் பலாத்காரம் செய்யப்பட்டார்கள்.  அத்தனை அட்டூழியங்களையும் நடத்தியது காங்கிரஸ். குஜராத் கலவர பழியை மோடியின் மீது பத்தாண்டுகளாக போட பார்த்தார்கள்.  ஆனால் காங்கிரஸ் ஆட்சியிலேயே அதற்கான தீர்ப்பு வந்து அதற்கும் மோடி அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று. அதனால் மரண வியாபாரி என்று காங்கிரஸ் அவருக்கு தந்த பட்டம் பிசுபிசுத்தது. தொடர்ந்து வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்தார் குஜராத்தில் மோடி அவர்கள்.  பிரதமராக பொறுப்பேற்ற பின் விவசாய சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. அதை வெறும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இடைத்தரகர்கள் மட்டுமே எதிர்த்தார்கள்.  அசல் விவசாயிகள் எல்லாருமே ஆதரித்தார்கள்.  

அந்தத் திட்டம் நீதிமன்றத்தில் நிலுவையில் வழக்காக உள்ளது.  அதற்கான பதில் அறிக்கை முழுமையாக தாக்கல் செய்யப்பட்டும் நீதிமன்றம் அந்த அறிக்கையின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் மற்றொரு காரணம்.  ஆனாலும் கலவரம் வேண்டாம் என்ற எண்ணத்துடன் அந்த திட்டத்தையும் வாபஸ் செய்த வாபஸ் பெற்றார் மோடி.எந்த பயனுமே இல்லாத ஒரு ஒரு சட்டம் இருந்து என்ன, இல்லாமல் என்ன...  வழக்கு முடியட்டும் என்று வாபஸ் பெற்று விட்டார் மோடி அவர்கள். இப்போது எல்லாமே அமைதியாக இருக்கிறது.  காங்கிரஸ் ஏதாவது செய்தாகவேண்டும் பஞ்சாபில்.  அமரீந்தர் சிங் அவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறியபின் தனிக் கட்சி தொடங்கி பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளார்.  உடனடியாக இந்த கூட்டணியை உடைப்பதற்கு ஏதேனும் பெரிய கலவரம் செய்ய வேண்டிய நிலைமையில் இருக்கிறது காங்கிரஸ். ஏதாவது செய்தால்தான் பஞ்சாபை தக்கவைத்துக்கொள்ள முடியும். 

பஞ்சாபில் பாஜகவை வெல்ல விட்டுவிட்டால் பிறகு பாகிஸ்தானுடைய அண்டை மாநிலமாக எல்லையை மிகப்பெரிய அளவில் பகிர்ந்து கொள்ளும் மற்றொரு மாநிலமாக இருக்கக்கூடிய பஞ்சாப் பாகிஸ்தான், பஞ்சாப் இரண்டின் போதைப்பொருள் தொழில் தடைபட்டுப் போகும்.  ஆயுத கடத்தல் தடைபட்டு போகும்.  நேரடியாக எந்த விதமான பயங்கரவாத செயல்களும் நடக்காது என்பது மிகத் தெளிவாக தெரிந்து வைத்துள்ளது காங்கிரஸ். அதனால் இது எல்லாவற்றையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் நாடு முழுக்க போதை பொருட்களை கொண்டு செல்ல வேண்டும் என்றால் பஞ்சாப் காங்கிரஸ் கைவசம் இருக்க வேண்டும்.  

 பாகிஸ்தானில் ஆட்சியில் எந்த கட்சி வந்தாலும் அதனுடைய தோழமை கட்சியாக இருக்கக்கூடிய உள்ளூர்  பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவு கட்சி என்று பார்த்தால் அது காங்கிரஸ் மட்டுமே.  அதனால் மோடி அவர்கள் வரும்போது இப்படி ஒரு திட்டத்தை தீட்டி உள்ளார்கள்.  அவருடைய வருகையை தடை செய்ய துணிந்து உள்ளார்கள். ஆப்ஷன் 1:  ஒருவேளை மோடியை வந்திருந்த கலவரக்காரர்கள் கொன்றிருந்தால் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு இருக்கும். அப்போது பாஜகவை ஒரு பயங்கரவாத கட்சி என்றும் மக்கள் அப்பாவி மக்களின் மீது ரவுடிகளை ஏவி கொலை செய்தார்கள் என்றும் தாராளமாக சொல்லமுடியும்.  அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு சீக்கியர்களை பாஜககாரர்கள் கொன்றால் பாஜககாரர்கள் மீது நேரடி பழி.  இல்லை என்றால் காங்கிரஸ்காரர்களே சீக்கியர்களைக் கொன்று பாஜகவுக்கு இதெல்லாம் புதிதல்லவே என்று பழியை போடலாம்.  தலையில் ஒரு காவி துண்டை கட்டிக்கொண்டு கையில் வாள் ஏந்தி ஒரு படம் பிடித்து போட்டால் போதுமே. அதை ஒளிபரப்புவதற்கு நூற்றுக்கணக்கான ஊடகங்கள் பணம் பெற்று ஒளிபரப்பி காரியத்தை சாதித்து இருப்பார்கள்.  

ஆப்ஷன்2:  ஒருவேளை பாதுகாப்பு காரணங்களுக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தி இருந்தால் அப்போதும் இந்த கலவரம் ஏற்பட்டிருக்கும்.  அந்த கலவரத்தில் பலர் இறந்திருப்பார்கள்.  நிச்சயமாக பாதுகாப்பு அதிகாரிகள் சொல்வார்கள் நாங்கள் பிரதமரை பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை அதனால் சுட்டோம் என்று.  விவசாயிகள் உடனே நாங்கள் மனு கொடுக்கவே முயன்றோம்.  ஆனால் புரிந்துகொள்ளாமல் எங்களை சுட்டார்கள்.  வாரணாசியில் மனுக்களை தரும்போது காரை விட்டு இறங்கிய மோடி அப்பாவி விவசாயிகள் மீது சுட்டுக் கொலை செய்தார்.  வேண்டுமென்றேதான் செய்தார்.  தன்னுடைய திட்டம் நிறைவேறவில்லை என்ற பழி வாங்கும் நடவடிக்கையாக செய்தார் என்று கூறி பஞ்சாப் மாநிலத்தை உடனடியாக தங்கள் பக்கம் தக்க வைத்துக் கொண்டிருப்பார்கள்.   ஏற்கனவே நடந்த மாநகராட்சி தேர்தலில் 12 இடங்களை வாய்க்கு வந்த பொய்யைச் சொல்லிய ஆம் ஆத்மி கட்சிக்கு 12 இடங்களில் வாரி வழங்கியுள்ளது பஞ்சாப்.  அதனால் அவர்களும் ஒன்றும் சிந்தித்து வாக்களிப்பார்கள் என்றெல்லாம் எதிர்பார்க்க வேண்டாம்.  ஒரு கலவரம் போதும் மிக எளிமையாக இந்த காரியத்தை முடிப்பதற்கு.  

ஆனால் இது எதுவுமே நடக்க விடாமல் மோடி வண்டியை திருப்பி கொண்டு ஊர் பக்கம் போய் சேர, திட்டத்தை எந்த பக்கமும் நடத்தவிடாமல் பிசுபிசுக்க விட்டு விட்டார்களே என்ற ஆத்திரத்தில்தான் சோனியா சன்னியின் மீது ஆத்திரத்தை கொட்டித் தீர்த்திருக்கிறார்.  இப்போது கலவரம் நடக்கவில்லை.  விஷயம் நீதிமன்றத்திற்கு போய்விட்டது. எச்சரிக்கைகள் எல்லாமே பஞ்சாப் மாநில முதலமைச்சருக்கும் அங்குள்ள டிஜிபிக்கும் சென்று கொண்டிருக்கிறது.  இது சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயமே அல்ல.எப்படியும் தேர்தலை ஒட்டி மோடி இங்கு வருவார், ஏதாவது திட்டங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்ப்பு இருந்தது.  மோடி வலையில் விழுந்தார்.  

இது மிக மிகத் துல்லியமாக எப்படி நடந்தாலும் கலவரமாக மாறும் என்று திட்டமிட்டு செயல் படுத்தப் பட்டிருக்கிறது.  இது எல்லாமே கலவரமாக மாறாமல் மிக சாமர்த்தியமாக குறைந்த நேரத்தில் திட்டமிட்டு முடிவெடுத்து மோடி அவர்கள் திரும்பிச் சென்று விட்டதால் திட்டம் பிசுபிசுத்த ஆத்திரத்தில் இருக்கிறார்கள் எதிர்க்கட்சிகள்.  பிசுபிசுத்தது சாமானியமான ஒரு திட்டமே அல்ல.   மிகப்பெரிய கலவரத்திற்கான விதை அழிக்கப்பட்டுள்ளது.  மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் எதிர்க்கட்சிகளின் சதியை.  காங்கிரசு இல்லா பாரதம் என்பது சாதாரண கோஷம் அல்ல.  அதுதான் அசல் சுதந்திர தினம். என குறிப்பிட்டுள்ளார்.(பின்குறிப்பு இந்த கட்டுரை முழுக்க முழுக்க தனி நபர்களால் அவர்களது முகநூல் /ட்விட்டர் பக்கங்களில் பகிரப்பட்டது இது TNNEW24 குழு எழுதியது அல்ல )