Tamilnadu

வீண் முயற்சி நடக்க போவதேயில்லை தமிழக அரசின் முடிவிற்கு துக்ளக் சத்தியநாராயணன் பதில்!

Stallin
Stallin

நீட் தேர்வு ரத்து என்பது நடக்க இயலாத ஒன்று என்றும் இதன் மூலம் ஒன்றும் நடக்க போவதில்லை பொழுதுதான் போகும் என குறிப்பிட்டுள்ளார் துக்ளக் சத்யநாராயணன் இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :- வீண் முயற்சி என்று தெரிந்தும் நடக்காது என்று தெரிந்தும் சில வகையான போராட்டங்களைத் தொடர்வது தமிழகத்தின் வாடிக்கையாகி விட்டது.  மாநில சுயாட்சி, தனி ஈழம், கச்சத்தீவு மீட்பு வரிசையில் இப்போது நீட் எதிர்ப்பும் சேர்ந்துள்ளது. நீட்டுக்கு எதிரான ஜனநாயக/ சட்டப் போராட்டம் தொடரும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிவு செய்துள்ளது. 


நீட் தேர்வால் அரசுப்பள்ளி மாணவர்கள், ஏழைகள், கிராமப்புற மாணவர்கள் டாக்டர் சீட் பெற முடியவில்லை என்பது இக்கட்சிகளின் வாதம். நீட் தேர்வுக்கு முன் தனியார் மருத்துவ கல்லூரிகளோ அரசியல்வாதிகள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளோ இத்தகையவர்களுக்கு சீட் வழங்கியதாக ஒரு உதாரணமாவது காட்ட முடியுமா என்று தெரியவில்லை.  அது தொடர்பாக ஒரு பதிலும் வரவில்லை.

ஒன்று-லட்சக்கணக்கில் டொனேஷன் தர வேண்டும் அல்லது மிகப்பெரிய சிபாரிசு வேண்டும். இல்லாவிட்டால் டாக்டர் சீட் என்பது எட்டாத கனியாகத்தான் இதுவரை இருந்து வந்திருக்கிறது. நீட் தேர்வு , தகுதி அடிப்படையில் டாக்டர் சீட் பெற வழி வகுக்கிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற படிக்க வேண்டுமே , பயிற்சி பெற செலவிட வேண்டுமே என்பதெல்லாம் அதை எதிர்க்க போதுமான காரணமாகாது. உரிய தகுதி இன்றி உயர்ந்த இடங்களைப் பிடிக்க முடியாது.

பிளஸ் டூ மார்க்கே போதும் என்றால் சர்வீஸ் கமிஷன், எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச் எதுவுமே தேவையில்லை. அந்த அடிப்படையிலேயே எல்லா வேலைகளையும் கொடுத்து விட முடியும். அதெல்லாம் இல்லை போராட்டம் தொடரும் என்றால் அதற்கு  முடிவே இருக்கப் போவதில்லை. அடுத்த கட்டமாக,  சட்டசபை தீர்மானங்களை சபாநாயகரே நேரடியாக ஜனாதிபதிக்கு அனுப்பலாம்.

ஜனாதிபதியும் காலம் கடத்தினால் ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஜனாதிபதியும் தேவையில்லை என்று போராடலாம். சுப்ரீம் கோர்ட் நீட் தேர்வில் உறுதியாக இருந்தால் ' ஒன்றிய அரசே சுப்ரீம் கோர்ட்டை டிஸ்மிஸ் செய் என்று போராடலாம். கன்டெம்ப்ட் வருமோ என்று பயமாக  இருந்தால் ' சுப்ரீம் கோர்ட்டே ஒன்றிய அரசை டிஸ்மிஸ் செய்' என்று போராட்டம் நடத்தலாம். கவர்னரை மாநில அரசே நியமிக்கும் என்று தீர்மானம் இயற்றலாம். இந்த வகையில் போராட்டங்களை தொடர்ந்து கொண்டே இருந்தால்பொழுது போகும். நீட் போகாது என்று குறிப்பிட்டுள்ளார் துக்ளக் சத்யநாராயணன்.