பாதிரியார்கள் பாஸ்டர் என்ற போர்வையில் சிலர் தங்களை வளப்படுத்தி கொள்ள கிறிஸ்துவத்தை தவறாக பயன்படுத்தி கொள்கிறார்கள் உண்மையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பலரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களின் செயலுக்கு வலு சேர்க்கும் விதமாக பாதிரியார் என சொல்லிக்கொள்ளும் தகவல்களும் கொடுக்கும் விளக்கங்களும் வெளியில் இருந்து பார்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளன.
பொது இறை கூட்டம் ஒன்றில் பேசக்கூடிய அவர் அனைவரும் "ஓ போடுங்கள்" சத்தமாக "ஓ போடுங்கள்" என கூறுகிறார், 'உடனே' அங்கு இருக்கும் மக்களும் சத்தமாக ஓ போடுகிறார்கள், இதற்கு அவர் கொடுத்த விளக்கம் தான் ஹைலைட் ஓ என்றால் ஒசன்னவாம்.. நினைவில் கொள்ளுங்கள் என சொல்கிறார், ஓ போடு என விக்ரம் பாடல் 90 களில் பிறந்தவர்களின் பேமஸ் பாடல் அதை அப்படியே இறை நம்பிக்கையில் புகுத்தி விட்டார். click
மற்றொரு வீடியோ ஒன்றில் நான் பரலோகத்திற்கு சென்றேன் எனவும் அங்கு கடவுளை பார்த்தேன் அவர் குழந்தைகள் உடன் விளையாடி கொண்டு இருந்தார், கையில் தண்ணீரை அள்ளி வீசினார், குழந்தைகள் கன்னத்தில் பட்டதும் அந்த காட்சி இருக்கிறதே என பாதிரியார் சொல்வதை பார்க்கும் போது வடிவேல் காட்சிகளை மிஞ்சிய அடுத்த ரகமாக உள்ளது. மேலும் தான் தயாரிக்கும் காட்சிகள் சிறப்பாக உள்ளது என கடவுள் பாராட்டினார் எனவும், சிடி காட்சிகளை கடவுள் வாங்கி பார்த்தார் எனவும், எந்த வித முகத்தில் சிரிப்போ அல்லது கவலையோ இல்லாமல் அடித்து விடுகிறார் பாதிரியார்.
இவர் தனது தொலைக்காட்சியில் ஊசி போடுவது சைத்தான் செயல் என ஒரு காட்சியை வைக்க அது வைரலாக பின்பு அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் அரசாங்கத்திற்கு முறையிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது பாஸ்டர் பேசியதை கோர்வையாக கோர்த்து யூடுப்பர் ஒருவர் ட்ரோல் வடிவில் வெளியிட்டுள்ளார் அதனை பார்க்க கிளிக் செய்யவும். watch video click
யூடுப் வீடியோவிற்கு கீழே வரும் கமெண்ட் பாக்ஸில் பல கிறிஸ்த மதத்தை பின்பற்றும் பலர் பாதிரியாரின் நம்பகதன்மையற்ற பேச்சை கண்டித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஓ போடுவது என்றால் என்ன என விளக்கம் கொடுத்த பாதிரியாரை மீம்ஸ், ட்ரோல்ஸ் என நெட்டிசன்கள் போடு போடு என போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.