Tamilnadu

விஜய் சொன்னது போல் "அண்ணாமலை" புடிச்சுட்டார் , "காசு" கொடுத்துதான் வாங்கி இருக்கிறார் கெத்து காட்டும் மலை "அண்ணாமலை" !

annamalai
annamalai

நடிகர் விஜய் விருது வழங்கும்  நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் குட்டிஸ்களை புடிச்சுட்டார் , அவங்கள ரசிகர்களா மாற்றிவிட்டார் என கூறி இருப்பார் , அதே போல் தமிழக இளைஞர்களை அண்ணாமலை புடிச்சுட்டார் என்று சொல்லும் அளவிற்கு ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது ,அது குறித்து  கிருஷ்ணமூர்த்தி என்ற அந்த கடைக்காரர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட கருத்து பின்வருமாறு :-


நேற்று எதேச்சையாக எனது கடைக்கு எதிரில் உள்ள உணவகத்தில் உணவருந்தி விட்டு காரில் ஏறியவர் யார் என்று பார்த்தால் பாஜக மாநில தலைவர் அண்ணன் அண்ணாமலை முன்னால் IPS  அவர்கள் நீண்ட நாட்களாக இவரை நேரில் பார்க்க வேண்டும் என நினைத்து கொண்டிருந்தேன் போய் பேசுனா பேசுவாரா என்ற தயக்கத்துடன் கார் கண்ணாடியை தட்டியதும் கண்ணாடியை இறக்கினார் .

சொல்லுங்க தம்பி என்றார் அண்ணா வணக்கம்  எதிர்ல மாஸ்க் டீ சர்ட் கடை வச்சுருக்கன் பிரதமர் நிதி உதவி திட்டத்தில்  நடைபாதை வியாபாரிகள் ஏழைகளுக்கு  10000 நிதி நிறைய பேருக்கு கிடைச்சது ரொம்ப உதவியாக இருந்தது பிரதமரை  நேரில் சந்தித்தால் அனைவரது சார்பாக நான் நன்றி தெரிவித்ததாக சொல்லுங்கள் என்றேன்.



உடனே காரில் இறங்கிய மனிதர் எதிரில் உள்ள கடைக்கு வந்து மாஸ்க் வாங்கிட்டு ரொம்ப சந்தோஷம் தம்பினு 5 நிமிடம் பேசிவிட்டு ஏதோ பக்கத்து வீட்டு சொந்தக்காரர் மாதிரி பேசிட்டு இருந்தார்பிரதமரிடம்  கண்டிப்பாக சொல்றன் தம்பி மென்மேலும் உங்களின் தொழில் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் சொல்ல நானும் அவருக்கு உங்களின்  மக்கள் பணி மெனமேலும் தொடர  வாழத்துக்கள் தெரிவித்துவிட்டு விடைபெற்றார்.


பத்து நிமிட சந்திப்பு இவ்வளவு எளிமையான ஒரு தலைவனா என்று  வியந்து போய் நின்றேன் இளைஞர்களுக்கு வழிகாட்டி எளிய மனிதர் எளிமையின் சிகரம் தலைவன் என்ற தலைக்கணம் இல்லாத மனிதர் அரசியல் தாண்டி நான் நேசிக்கும் நல்ல  மனிதர் மட்டற்ற மகிழ்ச்சியுடன் நன்றிகொங்கு மண்ணின்  பண்பும் குணமும் மாறாத மனிதர் என மிகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது .

அண்ணாமலை அந்த கடை காரரிடம் 100 ரூபாய் கொடுத்துதான் பொருள் வாங்கி இருக்கிறார் , அதாவது காசு கொடுத்து தான் வாங்கி இருக்கிறார் பார்த்தீர்களா என சமீபத்தில் ஆளும் கட்சி பிரமுகர் என குறி ஒருவர் பிரியாணி சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் சென்ற செய்தியுடன் ஒப்பிட்டு பகிர்ந்து வருகின்றனர் அண்ணாமலை ஆதரவாளர்கள் , புடிச்சுட்டார் உண்மையில் அண்ணாமலை  இளைஞர்களை புடிச்சுட்டார் . தமிழக அரசியலில் அண்ணாமலை கெத்து காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . source