திராவிட வளர்ச்சி திட்டம் என்பது பொய் பிம்பம் எனவும் முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களை வெளியே வரமுடியாமல் கயிறு கட்டி இருப்பதும் போட்டோ ஷாப் புகைப்படத்தை பரப்புவதும் கீழ்த்தரமான அரசியல் எனவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் அண்ணாமலை, இதுகுறித்து அண்ணாமலை தெரிவித்தது பின்வருமாறு :-
'திராவிட வளர்ச்சித் திட்டம்' என்ற பொய்யான பிம்பத்தை ஒருவர் பார்க்க வேண்டுமென்றால் தமிழக முதலமைச்சர் அவர்களின் கொளத்தூர் தொகுதியை பார்வையிட வேண்டும்.
முதலமைச்சர் தொகுதிக்குள் வரும்போது பொதுமக்களின் வீட்டிற்கு வெளியே கயிறு கட்டி அவர்களை வெளியே வரவிடாமல் தடுப்பது, Photoshop செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவது என்று கீழ்த்தரமான அரசியலை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார்.
இதில் கொடுமை என்னவென்றால் அவர் சென்னையின் மேயராக இருந்த பொழுதும், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இருந்த பொழுதும், தற்போது தமிழக முதலமைச்சராகவும் அதே இடங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டுக் கொண்டு இருக்கின்றார்.
அப்படியெனில் அவர் அந்தப் பதவிகளில் இருந்த பொழுது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எதையுமே செய்யவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது.வெற்று அறிவிப்புகளும் செயல்படுத்தாத வாக்குறுதிகளும் தான் திமுகவின் வளர்ச்சித் திட்டமபோல என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தேதியில் இருந்து தற்போதுவரை திமுகவினர் மற்றும் பாஜகவினர் இடையே கடுமையான குற்றசாட்டுகள் விமர்சனங்கள் கிண்டல்கள் என அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.