Tamilnadu

"பாஜக" வெற்றி எதிரொலி தமிழக ஊடகங்களுக்கு மறைமுக உத்தரவு?

Bjp
Bjp

பாஜக" வெற்றி எதிரொலி தமிழக ஊடகங்களுக்கு மறைமுக உத்தரவு?சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் 4 மாநிலங்களில் பாஜக மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது இது குறித்து நாடு முழுவதும் ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு வருகின்றனர், இந்த சூழலில் தமிழக ஊடகங்களும் காலை 7 மணி முதலே நேரலை நடத்தி வந்தனர்.


இந்த சூழலில் தற்போது தமிழக ஊடகங்களுக்கு முக்கியமான இடத்தில் இருந்து உத்தரவு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளதாம் அதாவது பாஜக வெற்றி குறித்து முகியத்துவம் கொடுக்காமல் பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது குறித்து முக்கியத்துவம் கொடுக்கவும், அதையே டேபிள் உள்ளிட்ட இடங்களில் முக்கியத்துவம் கொடுக்கவும் உத்தரவு வந்துள்ளதாம்.

ஏன் என்றால் பாஜக வட மாநிலங்களில் வெற்றி பெறுகிறது என தமிழகமக்களுக்கு தெரிந்துவிட்டால் வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கான வாக்கு வங்கி அதிகரிக்க வாய்ப்புகள் உண்டாகும் என்பதால் இந்த உத்தரவு மறைமுகமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வரலாற்றில் இல்லாத அளவு உத்திர பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது, உத்தர பிரதேச வரலாற்றை எடுத்துக்கொண்டால் அங்கு 1985க்கு பிறகு எந்த கட்சியும் 5 வருடம் ஆட்சி செய்த பின் மீண்டும் ஆட்சிக்கு வந்ததே கிடையாது. 1985க்கு பின் சோனியா காந்தி, வாஜ்பாய், அத்வானி, முலாயம் சிங் யாதவ், மாயாவதி என்ற எந்த பெரும் தலைவர்களாலும் தங்கள் கட்சியை மீண்டும் வெற்றிபெற வைக்க முடியவில்லை. 1985க்கு முன் காங்கிரஸ் பல முறை உத்தர பிரதேசத்தில் அடுத்தடுத்து வென்றது இருக்கிறது.

உத்தர பிரதேசத்தில் சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் வரிசையாக 4 முறை ஆட்சி புரிந்து இருக்கிறது. பாரதிய கிரந்தி தளம் கட்சியும் உத்தர பிரதேசத்தில் பலமுறை வென்றுள்ளது. ஆனால் அங்கு பாஜக கால் பாதிக்கவே 30 வருடங்கள் ஆனது. உத்தர பிரதேசத்தில் பாஜக 1977ல்தான் முதல்முறை வென்றது. பின்னர் மீண்டும் 1991ல்தான் பாஜக அங்கு மீண்டும் வென்றது. இடைப்பட்ட காலத்தில் 1982 முதல் 1989 வரை காங்கிரஸ் இரண்டு முறை தொடர்ந்து அங்கு ஆட்சி புரிந்தது. அந்த அளவிற்கு அங்கு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு இருந்த நிலையில் இந்த முறை 4 இடங்களை பிடிக்க கூட முடியாமல் காங்கிரஸ் திணறி வருகிறது.

இப்படி மிக பெரும் சாதனை நடந்ததை பேசாத தமிழக ஊடகங்கள் ஆம் ஆத்மி வெற்றி குறித்து பேசுவது பாஜகவின் வெற்றியை ஷாடோ பான் செய்ய கொடுத்த அழுத்தம் தான் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆமாம் சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா என்ன?