உத்திர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தான் கணித்த ஜோதிடம் அப்படியே நடந்து இருப்பதாக ஜோதிடர் பாலாஜி ஹாசன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் தெரிவித்ததாவது :-5 மாநில தேர்தல்.
நமது கணிப்பு பஞ்சாப் ஆம் ஆத்மி வெல்லும் என்று சொன்னோம் தற்சமயம் ஆம் ஆத்மி முன்னிலை ஆட்சியை பிடிக்க அதிக வாய்ப்பு உத்திரபிரதேசம் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் பாரதிய ஜனதா கட்சி 250 க்கும் மேல் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன உறுதியாக ஆட்சி அமைக்கும்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று சொன்னோம் ஆட்சி அமைக்க தேவையான 35 தொகுதிகளுக்கு மேலே முன்னிலை இருப்பதால் உறுதியாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது, மணிப்பூரில் பாரதிய ஜனதா கட்சியும் எம் பி பி இருவரும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பார்கள் யாருக்கும் தனி செல்வாக்கு கிடைக்காது என்று கணித்து இருந்தோம் அதன்படியே தேர்தல் முடிவுகளும் வந்துள்ளன.
கோவா யாருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது, அதிக தொகுதிகள் வெற்றி பெற்ற கட்சியான பாரதிய ஜனதா கட்சி இருக்கும் மேலும் சில பிற கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று சொல்லியிருந்தோம் அதன்படி முடிவுகள் வந்து கொண்டிருக்கிறது ஆட்சி அமைப்பது நாளை உறுதியாகிவிடும்
5 மாநில தேர்தல் கணிப்பு ஐந்துமே சரியாக அமைந்துள்ளன, சரியாக இந்த கணிப்பை கடந்த ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி புதுயுகம் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தேன், ஜோதிடம் என்பது ஒரு காலக் கண்ணாடி சரியான பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த இடம் இருந்தால் எதிர்காலத்தில் நடக்க கூடிய நன்மை தீமைகளை அறிந்து நம் வாழ்க்கையை சரி செய்து சிறப்பான முறையில் வாழலாம் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகி இருக்கிறது.
இந்த உலகியல் ஜோதிடம் எனும் அரிய கலையை எனக்கு மகன் போல எந்த ஒளிவுமறைவும் இன்றி கற்றுக்கொடுத்த எனது குருநாதர் சித்தயோகி சிவதாசன் அவர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை உரித்தாக்குகிறேன் நீங்கள் இல்லை என்றால் என் வாழ்க்கை கார் நிறுவனத்திலேயே ஒரு ஊழியனாக வாழ்ந்திருப்பேன்.
அரிய கலையை கற்றால் அதை பயன்படுத்தி பெயர் புகழ் சம்பாதிக்க நினைக்கும் இந்த உலகில் எதையும் ஒளிவு மறைவின்றி கற்றுக்கொடுக்க எப்படி உங்களுக்கு மனம் வந்ததோ.என் வாழ்நாள் உள்ளவரை உங்களை மறக்க மாட்டேன் ஐயா என தெரிவித்துள்ளார் ஜோதிடர் பாலாஜி ஹாசன் .