எடப்பாடி பழனிசாமி பன்னீர் செல்வம் இடையே நீர்பூத்த நெருப்பாக இருக்கும் மோதல் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என கூறப்படும் நிலையில், அதிமுகவின் பரிதாப நிலைக்கும், பல திட்டங்களை தமிழகத்திற்கு கொடுத்த பாஜக வளர்ச்சி அடையாமல் பார்த்து கொண்டதற்கும் எடப்பாடி பழனிசாமியே முக்கிய காரணம் என்ற தகவல் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
அதிலும் சேலம் பகுதியில் தான் வெல்லவேண்டும் என்ற சுய லாபத்திற்காக தேவர் vs வன்னியர் என்ற சூழலை உண்டாக்கியவர் இப்போது தேவர் vs கவுண்டர் என்ற ரீதியில் பணியாற்றி வருவதாகவும் அடுக்கடுக்கான புகார்கள் டெல்லிக்கு சென்றுள்ளன, சேலம் பகுதியில் எடப்பாடி பழனிசாமி வெல்ல வேண்டும் என்றால் அதற்கு நிச்சயம் வன்னியர்கள் கவுண்டர் வாக்கு தேவை. அதை மனதில் வைத்தே அதிமுகவின் பல மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தலை தாண்டியும் பாமகவிற்கு 10.5% இட ஒதுக்கீடு கொடுத்தார், அப்போது அரசியலை நன்கு கவனித்தவர்கள், எச்சரிக்கை விடுத்தார்கள் நீதிமன்றம் சென்றால் தனி உள் ஒதுக்கீடு சட்டம் செல்லாது குறிப்பாக உள் ஒதுக்கீடு அரசாணை மூலம் கல்லூரிகள், அரசு பணிகள் என தேர்வு செய்யப்படும் மாணவர்கள், பணியாளர்கள் நிலைமை படுமோசமாக போக வாய்ப்பு இருக்கிறது.
நீதிமன்றத்தால் 10.5% இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யபட்டால் அதன் மூலம் கல்லூரி பணிகளில் தேர்வான மாணவர்கள் நிலைமை நடு ஆற்றில் நிற்கும் நிலைக்கு தள்ளப்படும் இதனால் 100% பாதிக்க போவது வன்னியர்கள்தான் என எச்சரிக்கை விடுத்தனர், அது தற்போது நடந்தே விட்டது. வன்னியர் இட ஒதுக்கீடு மூலம் உண்மையில் அரசியல் லாபம் அடைந்தது அதிமுகவோ, பாமகவோ அல்ல மாறாக எடப்பாடி பழனிசாமி மட்டும்தான். சி.வி.சண்முகம் கூட இந்த முறை படு தோல்வியைதான் சந்தித்தார், பாமக பிரபலம் வழக்கறிஞர் பாலுவும் தோல்வியை சந்தித்தார் இவர்கள் வன்னியர்களின் முகமாக அடையாளப்பட்டவர்கள்.
இவர்கள் தோல்விக்கு என்ன காரணம் என யோசித்து பார்த்தால் அனைத்தும் புரியும் விஷயம் இதுவல்ல மிக மூத்த பழுத்த அரசியல்வாதி ஒருவர் டெல்லியில் உள்ள தனக்கு நெருங்கிய தொடர்பு வட்டாரங்களை பயன்படுத்து, தமிழக அரசியலை கவனித்து வரும் முக்கிய தலைவரிடம் சொல்லிய சேதிதான் இதுவரை எடப்பாடி பழனிசாமி மீது பாஜக வைத்திருந்த கூட்டணி தர்ம நம்பிக்கையை சுக்கு நூறாக உடைத்தது.
பன்னீர் செல்வம் சசிகலாவை தேவர் சமூகமாக முன்னிறுத்திய எடப்பாடி கவுண்டர் தரப்பு எம்எல்ஏ-களை வேலுமணி, தங்கமணி மூலம் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார், ஆனால் தற்போது தங்கமணி வேலுமணிக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு முனுசாமி, சண்முகம் உடன் சேர்ந்து உள்ளார், திட்டமிட்டு இப்போது தேவர் vs வன்னியர் என களத்தை மாற்ற நினைக்கிறார். சாதி அரசியல் மேலோங்கும் சமயத்தில் இந்து ரீதியாக வாக்குகள் ஒன்று சேராது அதே நேரத்தில் தென் மாவட்டத்தில் பன்னீர்செல்வம் தரப்பிற்கு தோல்வியையும், வட மாவட்டம் கொங்கு பகுதிகளில் அதிமுகவின் தனது தரப்பிற்கு வெற்றியையும் கொடுக்கும் என கணக்கு போட்டு செயல்பட்டார் பழனிசாமி.
அதேநேரத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூட்டணியில் இருந்தால் தனக்கு எதிராகவும் ஓபிஎஸ்ஸிற்கும் தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் கொடுத்த பாஜகவிற்கும் சாதகமாக சூழல் அமையும் என்பதால் அவரையும் கடைசி நேரம் வரை காக்க வைத்து கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதியை தேடி பிடித்து அளித்தார், அதிலும் குறிப்பாக இளம் முகமாக அரசியலுக்கு வந்த அண்ணாமலை வெற்றி பெற கூடாது என இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் அரவக்குறிச்சி பகுதியில் அண்ணாமலைக்கு சீட் ஒதுக்கினார்.
அண்ணாமலை கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர் என்று அடையாளப்பட்டு விட கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தார் எடப்பாடி என அடுக்கடுக்கான புகார்களை டெல்லியில் சொல்லியிருக்கிறார் மிக மூத்த அரசியல்வாதி. பாஜக vs பாமக என அரசியலை கொண்டு சென்று அதில் தேவர் சமூகம் வன்னியர் மற்றும் கவுண்டர் என மூன்று அதிக மக்கள்தொகை கொண்ட சமூகத்தை எதிர் எதிரே நிறுத்தி வெற்றிபெற நினைத்து கணக்கு போட்டு இருக்கிறார் எடப்பாடி அதற்காகத்தான் இந்த முறை தேவர் ஜெயந்தி பூஜைக்கு கூட எடப்பாடி பழனிசாமி நேரடியாக பசும்பொன் செல்லவில்லை தவிர்த்து இருக்கிறார் என்று அனைத்து தகவலையும் கொடுத்து இருக்கிறார்.
இதையடுத்து பாஜக டெல்லி தலைமை தமிழக தலைமைக்கு நமது கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்குங்கள் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் எந்த கருத்தும் சொல்லவேண்டாம் மீதியை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறது டெல்லி தரப்பு.