Tamilnadu

சிக்கிய சிவப்பு துண்டு கோவன்! இதற்கு முன் அதிமுக ஆட்சியில் அப்படி பார்த்தது !!

govan songs
govan songs

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் எந்த பிரச்சனைக்கு எல்லாம் திருமுருகன் காந்தி, கோவன், இன்னும் பிற நபர்கள் போராட்டம் ஆர்ப்பாட்டம் என நடத்தினர்களோ அதுவெல்லாம் அப்படியே திமுக ஆட்சியிலும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.


திமுக ஆட்சிக்கு வந்தால் கொரோனா ஊரடங்கு நீக்கப்படும் என சொன்ன ஸ்டாலின் முதல்வராகபொறுப்பேற்ற பின்பு கொரோனா ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டார், எதிர்க்கட்சியாக இருக்கும் போது, டாஸ்மாக் திறப்பது நியாயமாகுடி கெடுக்கும் அதிமுக அரசு என போராட்டம் நடத்திய ஸ்டாலின், முதல்வராக பொறுப்பேற்ற பின்பு 8 மணிக்கு டாஸ்மாக் திறக்க உத்தரவிட்டார்.

இந்த சூழலில் அதிமுக ஆட்சியின் போது சாராய கடைகள் முன்பு பாடல் பாடி ஆர்ப்பாட்டம் நடத்திய கோவன் மற்றும் அவரது குழுவினர் எங்கே என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர், இந்த சூழலில்தான் பிரபல எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் கோவன் குழுவினரை கிண்டல் செய்து பாடல் ஒன்றிணை டெடிகேட் செய்துள்ளார்.இதுகுறித்து ஸ்டான்லி ராஜன் குறிப்பிட்டவை பின்வருமாறு :- 

அந்த கம்யூனிச போராளி கோவனையும் அவரின் கோ ஆர்ட்டிஸ்டுகளையும் காணவே இல்லை, தமிழகத்திற்கு ஒரு ஆபத்து என்றால் அடிக்கடி தப்படித்து பாடும் அந்த ஆஸ்கர் கலைஞனுக்கு என்னாயிற்றோ தெரியவில்லைசீன குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் வேலை கிடைத்துவிட்டதோ என தேடினால் அங்கும் இல்லையாம், ஒருவேளை பாடல் எழுதும் கலை மறந்திருக்கலாம்

மிஸ்டர் கோவன், உங்களுக்கு பாடலை நாங்கள் தருகின்றோம் ஆனால் உங்கள் ஆட்டமும் தப்பும் உங்களுக்கு மட்டுமே சிகப்பு பிரம்மன் கொடுத்தவரம் அதை எம்மால் செய்யமுடியாது , இதோ பாடல், தயவு செய்து விரைந்து வந்து பாடவும்

"விசயன் தொறந்திட்டாரு அணைய‌ ,ஸ்டானின் மறந்துட்டாரு அனைய‌ , அந்த அணைய‌ மக்கா அந்த அணைய‌தமிழகத்து தண்ணியெல்லாம் வீணாக ஓடுது ,டாஸ்மாக்கு சரக்குத்தான் இங்கவந்து பாயுதுஎன்னன்னு கேள்விகேட்டா விடியலுன்னு சொல்லுறான் , எங்கடா விடிஞ்ச்சதுன்னா மூஞ்சியிலே அடிக்கிறான்முடியல முடியல துயரம் ஏதும் முடியலவிடியல விடியல கொஞ்சம் கூட விடியல‌ நீட்தேர்வு நடக்குது நெல் எல்லாம் காயுது, பெட்ரோல் விலை உயருது மக்க மனம் கருகுதுரெட்ஜியண்ட் வியாபாரம் ஜோராக நடக்குது ,ரெட்லைட்டு ஊடகம் அத சாதனைன்னு சொல்லுது

விடியும்ன்னு சொன்னாங்க முடியும்னு சொன்னாங்க‌, சன்ஷைன‌ மட்டும் பளபளக்க வச்சாங்க‌, உதயநிதி வாராக சபரீசன் வாராக‌, இன்பநிதி வாரதுக்கும் நாள் குறிச்சி வச்சாக‌ ,முடியல முடியல துயரம் ஏதும் முடியலவிடியல விடியல கொஞ்சம் கூட விடியல என பாடல் வரிகளை குறிப்பிட்டுள்ளார்.  பார்ப்பதற்கு நகைச்சுவாக தோன்றினாலும் கோவன் போன்றவர்கள் மக்கள் நலனுக்காக போராடுவதாக காட்டி கொண்டு தங்களை வளப்படுத்தி கொள்ள தமிழக மக்களை முட்டாள் ஆக்கிவிட்டார்கள், அதிமுக ஆட்சியில் கடைசியாக போராட்டத்தில் பார்த்தது இப்போதுதிமுக ஆட்சியில் எங்கே இவர்கள்  என தேடும் நிலைதான் உள்ளது என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் வைத்து வருகின்றனர்.

தற்போது நெட்டிசங்களிடம் சிக்கிய கோவன் இனியாவது தனது குழுவினருடன்சாராய கடைக்கு எதிராக திமுக அரசிற்கு எதிராக ஆட்டம் போடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.