Cinema

போதும்டா சாமி "இனி" அந்த வேலையே வேண்டாம்... நடிகர் சூர்யா எடுத்த புதிய முடிவு ..!

suriya jyothika
suriya jyothika

தமிழ் திரைப்பட துறையில் குறிப்பிட்ட ஸ்டார் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா இவருக்கு என்று ரசிகர் பட்டாளம் உண்டு இவரது குடும்பமே சினிமா துறையை சேர்ந்தவர்கள் தந்தை, மனைவி தம்பி என அனைவருமே சினிமா துறையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர், சினிமாவில் நடிப்பதை போன்று திரைப்படங்களையும் சூர்யா குடும்பம் தயாரித்து வருகிறது.


நிலைமை இப்படி இருக்க கடந்த சில ஆண்டுகளாக நடிகர் சூர்யா குடும்பத்தினர் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை விமர்சனம் செய்தனர், சிவகுமார் தஞ்சை பெரிய கோவிலை விமர்சனம் செய்ய அதையே தொடர்ந்து ஜோதிகா கோவில் கட்டுவதற்கு பதில் மருத்துவமனை கட்டலாம் என தெரிவித்தார், தனது பங்கிற்கு நடிகர் கார்த்தி புதிய சுற்று சூழல் வரைவு குறித்து விமர்சனம் செய்தார்.

இப்படி மாறி மாறி மத்திய அரசை ஏதோ ஒரு வகையில் மறைமுகமாக விமர்சனம் செய்து வந்த சூர்யா குடும்பம் ஒரு கட்டத்தில் பல்வேறு எதிர்ப்புகளையும் சந்திக்க தொடங்கியது ஜோதிகாவின் தஞ்சை பெரிய கோவில் பேச்சு விவகாரத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்தார், சிவகுமார் மீது திருப்பதியில் வழக்கு பதிவு செய்யப்பட்டது, கார்த்தியின் திரைப்பட பட பிடிப்பை இந்து அமைப்புகள் முற்றுகையிட்டு தடுத்தனர்.

இது ஒருபுறம் என்றால் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் கடும் எதிர்ப்பை சூர்யாவிற்கு கொடுத்தது, வன்னியர் அமைப்பினர் போராட்டத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை மேலும் சூர்யாவிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் வெளியான திரைப்படம் தோல்வியை தழுவியது சூர்யாவை குழப்பத்தில் ஆழ்த்தியது.

திரையில் முன்னேற வேண்டிய காலகட்டத்தில் தேவையில்லாமல் அரசியல் சர்ச்சையில் சிக்கிவிட்டமோ என்று இப்போது புலம்பி வருகிறாராம், அதோடு இனி அரசியல் திரைப்படங்களே வேண்டாம் என்றும் முடிவிற்கு சூர்யா வந்துவிட்டாராம், மேலும் அடுத்த படத்தில் எந்தவித அரசியல் வசனங்களோ அல்லது எந்த சமுதாயம் குறித்த தேவையில்லாத சர்ச்சைகளோ இல்லாமல் இருக்கவேண்டும் என ஸ்ட்ரிடாக இயக்குனர்களிடம் சொல்லிவிட்டாராம்.

அரசியல் வசனம் பேசும் நடிகர்களை இளம் பார்வையாளர்கள் விரும்புவதில்லை என்பதே தற்போதைய கள எதார்த்தமாக உள்ள நிலையில் அதனை சூர்யா சற்று காலம் கடந்து உணர்கிறார் என திரை துறையில் இருக்கும் பலரே கருத்து தெரிவித்து வருகின்றனர்.