சர்ச்சையான தமிழக முதல்வர் சந்திப்பு "வா வா ஒத்தையா வந்தாலும் சரி" ரெட்டையா வந்தாலும் சரி...பாக்கலாம் வெளுத்துவிட்ட கஸ்தூரி !kasthuri and sharmilaa
kasthuri and sharmilaa

தமிழக முதல்வர் ஸ்டாலின் யூடுப் பிரபலங்கள் சிலரை சந்தித்தது கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது, அதிலும் குறிப்பாக சபை நாகரீகம் பொது நாகரீகம் என்ற ஒன்றே இல்லாமல் பொது வெளியில் கெட்ட வார்த்தை பேசி பணம் சம்பாரிப்பவர்கள் பிலிப் பிலிப் என்ற யூடுப் சேனலை சேர்ந்த இருவர்.

இவர்களை தமிழக முதல்வர் எப்படி சந்திக்க அனுமதித்தார் இதன் பின்னணி என்ன என பலரும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில் நடிகை கஸ்தூரி தமிழக முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தார் அதில் புதுப்பிக்கப்பட்ட மற்றும் ஊடக ஆர்வமுள்ளவராக தோன்றுவதற்கான முதல்வர் ஸ்டாலினின் முயற்சி இதுதானா?  அல்லது இது புதிய தலைமுறை தீப்பொறி ஆறுமுகங்களுக்கான ஆட்சேர்ப்பா?

இவர்களில் சிலரை ஸ்டாலின் உண்மையில் அறியவில்லை என்பது வெளிப்படையானது.  திமுக குப்பைகளை ஊக்குவிப்பது வேறு, மாநில முதல்வர் அதைச் செய்வது வேறு.   என காட்டமாக விமர்சனம் செய்து இருந்தார்

அதாவது கெட்ட வார்த்தை பேசுவதை தொழிலாக கொண்ட பிலிப் பிலிப் சேனலை சேர்ந்த இருவரை சந்தித்தது குறித்து இவ்வாறு குறிப்பிட்டார் கஸ்தூரி.

இதற்கு வரிந்துகட்டிகொண்டு கேள்வி எழுப்ப வந்த சின்னத்திரை துணை நடிகை ஷர்மிளா மற்றும் u2brutus எனும் நபரையும் ப்ருட்ஸ் போட்டுள்ளார் கஸ்தூரி கஸ்தூரியின் கேள்விக்கு ஷர்மிளா துணை கேள்வி எழுப்பினார் அதில் :- கேள்வி கேட்பவர்கள்…உண்னமயை பேசுபவர்கள் …இவங்க பார்வையில் ரப்பிஷ்ஷாம்ல இவர்கள் அனைவரும் தங்கள் சேனல்கள் மூலம் CM relief fundsக்க்கு donateசெஞ்சிருக்காங்க, நீங்க என்ன மேடம் செஞ்சிருக்கீங்கஇப்படி வெட்டியா பதிவு போடுவதை தவிர  என ஷர்மிளா கேட்க அதற்கு கஸ்தூரி கொடுத்த பதில்தான் டாப்.

கெட்ட வார்த்தை உங்களுக்கு கேள்வி கேட்பதாய் தெரிகிறதா ?ganrape joke சொல்வதுதான் உண்மை பேசுற லட்சணமா? நாளைக்கு தாவூத், பின் லாடன் நிதி குடுத்தாலும் வாங்கிட்டு போஸ் தருவாரா CM ? நிதி கொடுத்தால் யாரை வேண்டுமானாலும் வரவேற்போம் என்பது  உங்களுக்கு  சாதாரணமா  என்னவோ. Not for me. என சின்னத்திரை துணை நடிகை ஷர்மிளாவை வெளுத்துவிட்டார் கஸ்தூரி

 .

இதற்கிடையில் u2brutus என்பவர் கேள்வி எழுப்ப அவருக்கும் முறையான பதிலடி கொடுத்தார் :- அடடே !  வாங்க பிரதர் தனி நபரை பற்றி எழுதிய, வருத்தம் தெரிவித்து நீக்கிவிட்ட  பழைய  பதிவை சுட்டிக்காட்ட தெரியுது... ஒட்டுமொத்தமா எல்லாரையும் முகம் சுளிக்க வைக்கும் கொச்சை குப்பைகளை கண்டிக்காதது ஏன்? வாழ்க உங்க சமூக நோக்கு. 

உங்களை ஏதோன்னு நினைச்சேன். இந்த விஷயங்களில் என்னுடைய  நிலைப்பாடு என்ன என்று கூட  தெரியாத , basic homework கூட பண்ணாத பொய்களை அள்ளி வீசும்  டிபிக்கல் திதிசொ தான் நீங்களும் என்று உங்கள் பதிவில் தெரிகிறது.  இதில் ஆபாச குப்பைகளுக்கு  முட்டு வேறு. அடுத்து  கலைமாமணி பட்டம் கேட்பீங்களோ? என பதிலடி கொடுத்தார்.

திதிசொ என்றால் திராவிட திருட்டு சொம்பு என பொருள் மொத்தத்தில் கெட்ட வார்த்தை பேசும் நபர்களுக்கு ஆதரவாக பேச வந்த துணை நடிகை ஷர்மிளா, u2brutus என்பவரையும் ரைட் லெப்ட் வாங்கிவிட்டார் கஸ்தூரி, ஒத்தயா வந்தாலும் சரி ரெட்டையா வந்தாலும் சரி வா ஒரு கை பார்க்கலாம் என கஸ்தூரி கொடுத்த அடி இருவருக்கும் முறையான பதிலடியாக அமைந்தது.

Share at :

Recent posts

View all posts

Reach out