அவ்ளோதான்! ஆர்யன்கான் கதை கந்தல்! சீறி பாயும் சிங்கம் "சமீர் வான்கடே" - சிக்கப்போகும் அடுத்த அரசியல் பிரபலம்! ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் விவகாரத்தில் திருப்புமுனைzhrukhan son
zhrukhan son

பாலிவுட் என்றாலே சினிமாவுக்கு மட்டுமல்லாமல் போதைப்பொருள் பழக்கத்திற்கும் மிகவும் பிரபலமானவர்கள் என சொல்லுமளவிற்கு தற்போதைய நிலவரங்கள் தெரிவிக்கின்றன.சுஷாந்தின்  காதலி முதற்கொண்டு தற்போது ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் வரை உதாரணத்துக்கு சொல்லிக்கொண்டே போகலாம்.

இவர்களெல்லாம் ஒரு தட்டு தட்டி லாக் செய்வதற்காகவே பிரத்யேகமாக செயல்பட்டு வருகிறார் ஐஆர்எஸ் அதிகாரி சமீர் வான்கடே. மிக சிறப்பாக செயல்பட்டு வரும் இவர் தற்போது அனைவரையும் அதிர்ச்சி அடையும் வகையில் மத்திய அரசிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், "மும்பை காவல்துறை நான் என்ன செய்கிறேன், எப்படி மற்றவற்றை கவனிக்கிறேன் என்பது உள்ளிட்ட அனைத்து விவரத்தையும் பின் தொடர்ந்து என்னை கவனித்து வருகிறது" என புகார் தெரிவித்து உள்ளார் 

சென்ற வாரம், மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மற்றும் அவருடைய நண்பர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர். சென்ற இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த்தை தொடர்ந்து பல பிரபலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கி வருவது கண்கூடாக தெரிகிறது. ஏற்கனவே  சுஷாந்தின் காதலி உட்பட சிலர் கைது செய்யப்பட்டும் உள்ளது. அதன் பின்னர் இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளிகளை  வலை  வீசி  பிடிக்கும் பணியில் இறங்கியது போதைபொருள் தடுப்புபிரிவினர். 

இதன் எதிரொலியாக, தொடர்புடையவர்களை கண்காணிக்கும் அதிகாரியான சமீர் வான்கடே பெயரை கேட்டாலே பாலிவுட் பிரபலங்களுக்கு ஜுரம் வர ஆரம்பிக்கிறது. சமீரை பொறுத்தவரையில் தற்போது மும்பை மண்டல போதை பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குனராக இருக்கிறார். இதற்கு முன்னதாக தேசிய புலனாய்வு அமைப்பு, வருவாய் புலனாய்வு இயக்குனரகம், விமானப் புலனாய்வு பிரிவின் துணை ஆணையர் உள்ளிட்ட பல பிரிவுகளில் மிக சிறப்பாக பணியாற்றினார், மிக துணிவுடன் பணியாற்றி வரும் இவரது செயலை பார்த்து மத்திய அரசு இவருக்கு குட் புக்கில் இடம்  கொடுத்து இருக்கின்றது.

இதன் காரணமாகத்தான் மும்பையில் அதிக அளவு கொடிகட்டி பறக்கும் இந்த போதை பொருள் விவகாரம் மற்றும் இது தொடர்பானவர்களை பிடிப்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன்னர் மும்பை மண்டல போதைப் பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குனராக பணியில் அமர்த்தப்பட்டார் சமீர். இதுவரை 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான போதைப் பொருளை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீர் தற்போது போதை மாஃபியா கும்பலை தேடித்தேடி வேட்டையாடி வருகிறார். இதுதொடர்பாக உள்ள சர்வதேச போதை கும்பல் குறித்த விவரங்களையும் வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் சிலரையும் கைது செய்து இருக்கிறார்.

அதேவேளையில் போதை மாஃபியா கும்பலுடன் பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நெருக்கம் இருப்பதையும் மிகத்தெளிவாக கண்டுபிடித்து இருக்கின்றார். இதன் காரணமாக அரசியல் நெருக்கடியை சந்தித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் பாலிவுட் பிரபலங்களை ஸ்கெட்ச் போட்டு தூக்குவதால் அவர்களது அரசியல் செல்வாக்கால் நெருக்கடியை சந்தித்து வருகிறார். இதற்காக இவர் மீது சில தாக்குதலும் நடந்து இருக்கின்றது. எனவேதான் ஆரியன் கான் கைதுக்கு பல பாலிவுட் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்தும், சமீருக்கு எதிராக கருத்துக்களையும் தெரிவித்து உள்ளனர்.

சொல்லப்போனால், போதைப் பொருள் தடுப்புப்பிரிவினருக்கும் மகாராஷ்டிர மாநில போலீசாருக்கும் இடையே தற்போது பனிப்போர் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் ஆளுங்கட்சியின் பின்புலத்தில் இருக்கும் மிக முக்கிய புள்ளிகளும் போதை பொருள் வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கின்றனர் என்பதே.  இதனை தட்டிக்கேட்கும் சமீருக்கு ஆபத்து காத்திருக்கிறது என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். 

கடந்த 2015ஆம் ஆண்டு அதிகாரி சமீரின் தாயார்  காலமாகி உள்ளார். எனவே சில குறிப்பிட்ட தினங்களில் மட்டும் தன்  தாயாரின் ஓஷிவாரா கல்லறைக்கு சென்று வருவதை  வழக்கமாக கொண்டு உள்ளார் சமீர்.  தற்போது ஓஷிவாரா காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவலர்கள், தான் எங்கு சென்றாலும் உன்னிப்பாக கவனித்து வருவதை அறிந்த சமீர் இது குறித்த சிசிடிவி காட்சி ஆதாரத்தையும்   வைத்திருக்கிறார். இதுதொடர்பாக மகாராஷ்டிரா டிஜிபியிடம் புகார் அளித்திருக்கிறார். 

இப்படி ஒரு நிலையில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அடுத்து வரும் 6 மாதங்கள் இருக்கின்றது. இப்படி ஒரு நிலையில் சமீர் பணியிட மாற்றம் செய்ய வாய்ப்பு இருந்த ஒரு தருணத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் இவரது சிறந்த பணியை பாராட்டி பணி நீட்டிப்பு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஆரியன் விவகாரத்தைப் பொறுத்தவரையில் சமீரின் மிக முக்கிய ஆதாரங்கள் அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முக்கிய சாட்சியாக கருதப்படுகிறது.

சமீரின் நேர்மையான பணிக்கு விடை கிடைக்குமா? குற்றவாளிகள்  வெளிச்சத்திற்கு  வருவார்களா? இல்லை வர  விடாமல் தடைக்கு எந்த எல்லைக்கும் செல்வார்களா என்பதை பொறுத்திருந்த தான் பார்க்க வேண்டும்.

Share at :

Recent posts

View all posts

Reach out