தமிழக முன்னணி ஊடகம் ஒன்றில் விவாதத்தின் போது திமுக சார்பில் பங்கேற்ற பங்கேற்பாளர் முன்னாள் அரசு அதிகாரியை எங்களுக்கும் சைகை மொழி தெரியும் அரசியலில் நாங்களும் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் எனவும் யாரை எப்படி சமாளிக்க வேண்டும் என மிரட்டல் விடுத்த சம்பவம் கடும் அதிர்வலைகளை உண்டாகியுள்ளது .
தனியார் தொலைக்காட்சியில் சென்னையில் ஏற்பட்டுள்ள மழை நீர் பாதிப்பு குறித்து விவாதம் நடந்தது இதில் ஆளும் கட்சியான திமுக சார்பில் சபாபதி மோகன் , அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி முன்னாள் பொதுப்பணித்துறை அதிகாரி திருநாவுக்கரசு , அறப்போர் இயக்கம் சார்பில் இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
விவாதத்தை கார்த்திகேயன் தொகுத்து வழங்கினார் இந்த சூழலில் திமுக சார்பில் கலந்து கொண்ட சபாபதி மோகன் ஒரு கட்டத்தில் மக்கள் பார்த்து கொண்டு இருப்பார்களே என்ற அச்சம் துளியும் இன்றி ஆளும் கட்சி என்ற தொனியில் முன்னாள் அரசு அதிகாரியை ஓபன் விவாதத்தில் மிரட்டல் விடுத்தார் , இதனை நேரடியாக கண்டிக்காமல் "கார்த்திகை செல்வன்" முகத்தை சாந்தமாக வைத்து கொண்டு சபாபதி மோகனிடம் முறையிடுவது போன்று பேசியது மேலும் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது .
நேற்றைய முந்தய தினம் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் 'சேகர் பாபு' நிவாரண பொருள்கள் வழங்க களத்திற்கு சென்ற பாஜகவினரை நோக்கி மிரட்டல் விடுத்ததும் , அதனை தொடர்ந்து ஊடகங்களில் அந்த செய்தி வெளியானதும் அதிருப்தியை உண்டாக்கிய சூழலில் மற்றொரு ஆளும்கட்சி பிரமுகர் நேரலை விவாதம் என்றும் பாராமல் முன்னாள் அரசு அதிகாரி ஒருவரை ஊடகத்தில் வைத்தே மிரட்டல் விடுத்தது இதுதான் ஆளும் கட்சியின் பொறுப்பான நடவடிக்கையா ? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இப்படித்தான் ஊடகங்களில் இதற்கு முன்னர் திமுக சார்பில் தமிழன் பிரசன்னா என்ற நபர் அதிகமாக பேசிவந்தார் இன்று அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை , மக்கள் கேள்விக்கு பதில் அளிக்க கூடிய இடத்தில் இருக்கும் ஆளும்கட்சியினர் மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினால் அது அவர்களுக்கே எதிராக முடியும் என்றே கூறப்படுகிறது . சபாபதி மோகன் மிரட்டல் விடுத்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது .