முட்டு கொடுத்து காப்பாற்ற முயலும் ஐயன் கார்த்திகேயன் சட்ட நடவடிக்கை கண்டிப்பாக உண்டு என சின்மயி எச்சரிக்கை!!Cinmayi - iyankarthikeyan - aravitharaj
Cinmayi - iyankarthikeyan - aravitharaj

பிரபல பாடகி சின்மயி குறித்த தனிப்பட்ட மருத்துவ தகவல்களை அரவிந்த ராஜ் என்ற மருத்துவர், கிளப் ஹவுஸ் என்ற புதிய ஆப் ஒன்றில் தவறாக குறிப்பிட்டது குறித்த சர்ச்சை அதிகரித்துள்ளது.

சின்மயி வேறு ஒரு மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற்ற அனைத்து தகவல்களும் தனக்கு தெரியும் எனவும், மேலும் அதுகுறித்த பல தகவல்களை பொது வெளியில் பகிர்ந்துள்ளார் அரவிந்த ராஜ் என்ற மருத்துவர், இது குறித்து சின்மயி கவனத்திற்கு செல்ல, பொய் சொல்லி தனது நடத்தயில் சந்தேகத்தை உருவாக்கும் அரவிந்தராஜ் என்பவன் மீது முறையாக மருத்துவ துறையில் நடவடிக்கை எடுக்க இருப்பதாக சின்மயி தெரிவித்துள்ளார்.

தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நபர்களின் விவரங்களை பொதுவெளியில் பகிர்வது குற்றம் அப்படி இருக்கையில் மற்றொரு நபரிடம் சிகிச்சை பெற்றதாக போலியான தகவலை பரப்பியது மிக பெரிய குற்றமாக பார்க்க படுகிறது, மேலும் அந்த மருத்துவர் குடி போதையில் மேலும் பல முறை நாகரீகமற்று பேசியதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவரின் அநாகரீக செயலுக்கு பலரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர், பெண்கள் பலரும் இப்படித்தான் ஒரு மருத்துவர் நடந்து கொள்வாரா? உங்களை நம்பி ரகசியம் ஏதேனும் நோயாளிகள் சொன்னால் இப்படித்தான் நடந்து கொள்வீர்களா? என கடுமையாக பலரும் விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர்.

விவகாரம் வேறு பக்கம் செல்வதை அறிந்த டாக்டர் சின்மயியை தொடர்பு கொண்டு சமரசம் செய்ய முயன்று இருக்கிறார், ஆனால் அவர் நேரடியாக சட்ட நடவடிக்கையில் ஈடுபட இருப்பதாக தெரிவித்து விட்டார், இந்த நிலையில் யூடுப்பர் ஐயன் கார்த்திகேயன் என்பவர், சின்மயி குறித்து தவறாக பேசிய டாக்டருக்கு பயங்கரமாக முட்டு கொடுத்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் மன்னிப்பு கேட்டுவிட்டார் இதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்பது போன்ற தொனியில் கருத்து பகிர்ந்துள்ளார், மிகவும் பாதுகாப்பாக யாரும் கமெண்ட் செய்து கழுவி ஊதிவார்களோ என கமெண்ட் செக்ஸனை ஆப் செய்திவிட்டு முட்டு கொடுத்துள்ளார் ஐயன் கார்த்திகேயன்.

குடிபோதையில் ஒருவன் ரகசியத்தை பொது வெளியில் சொல்லிவிட்டு மன்னிப்பு கேட்டால் அனைத்தும் சரியாகி விடுமா? ஐயன் கார்த்திகேயன் போன்றோர் சில்லறை தனமாக முட்டு கொடுப்பதை நிறுத்தவேண்டும் இந்த லட்சணத்துல இவர் பல மேடைகளில் சமத்துவம், உண்மை செய்தி அறிவது எப்படி என பலருக்கு வகுப்பு எடுக்கிறார் எனவும் விமர்சனங்கள் ஐயன் கார்த்திகேயன் மீது முன்வைக்க படுகிறது.

அரவிந்த ராஜ் என்ற மருத்துவர் குடிபோதையில் ஐயன் கார்த்திகேயன் வீட்டில் உள்ள பெண்கள் குறித்து தவறாக பேசியிருந்தால் இதே போல் மன்னிப்பு கேட்டிவிட்டார் விட்டு விடுவோம் என பொதுவெளியில் எழுத்துவாரா? எப்படி கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் பெண் குறித்து தவறாக பேசிய ஒருவனுக்கு வக்காலத்து வாங்க வருகிறார் எனவும் காரசாரமான கேள்விகள் முன்வைக்க படுகிறது.

சின்மயி குறித்து தவறாக பேசிய நபர் நாளை அவரிடம் மருத்துவம் பார்க்கவந்த பெண்கள் குறித்தோ அல்லது வேறு நபர்கள் குறித்த தகவலை பொது வெளியில் பகிற மாட்டான் என்பதில் என்ன நிச்சயம் இருக்கிறது, உடனடியாக அந்த மருத்துவர் மீது மெடிக்கல் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

குடிபோதையில் டாக்டர் பேசியதையும் சின்மயி வெளுத்து எடுத்த வீடியோவை பார்க்க - https://fb.watch/64f0v9joXU/

Share at :

Recent posts

View all posts

Reach out