Tamilnadu

"மெல்டிங்".. சரவணனின் செயல் அவருக்கே வினையான பரிதாபம்..! ஆறுதல் சொல்லும் உடன்பிறப்புகள்!

Saravanan
Saravanan

வெல்லம் தரமற்று இருப்பது ஏன் என்ற கேள்விக்கு திமுகவினர் பலரும் பலவாறு பதில் தெரிவிக்க திமுகவின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான சரவணன் விவாத நிகழ்ச்சி ஒன்றில் வெல்லத்தின் மெல்டிங் பாய்ண்ட் தெரியுமா? வெயிலில் வெல்லம் உருகதான் செய்யும் என ஆவேசமாக பேசினார்.


இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் கடும் கிண்டலுக்கு உள்ளானார் சரவணன், மீம்ஸ், ட்ரோல்ஸ் என ட்விட்டர் ட்ரெண்டிங்கில் கூட மெல்டிங் என்ற வார்த்தை இடம்பெற்றது, இந்த சூழலில் தற்போது சரவணன் சொந்த காசில் தானே சூனியம் வைத்த குறையாக மற்றொரு சிக்கலில் சிக்கி இருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்கெடுப்பு ஒன்றிணை நடத்திய சரவணன் தமிழகத்தில் தாமரை மலருமா என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.


இதற்கு பதிலாக 24 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் பதிவாகின அதில் 60 சதவிகிதம் பேர் மலரும் என வாக்கு செலுத்த கடும் பின்னடைவை சந்தித்துள்ளார் சரவணன், ஏற்கனவே மெல்டிங் சரவணன் என பெயர் எடுத்த சூழலில் இப்போது ஓட்டிங் (vote) சரவணன் என்ற புதிய பெயரையும் எடுத்துள்ளார். 

இது ஒரு பக்கம் இருக்க பாஜக செய்தி தொடர்பாளர் எஸ்ஜி சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் சரவணன் திமுக தலைமை பொறுப்பிற்கு வருவாரா என கேள்வி எழுப்பி வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி இருந்தார்.

அதில் எக்காலத்திலும் முடியாது என 90% பேர் கருத்து பதிவிட்டுள்ளனர், தொடர்ந்து தனது செயல்பாடுகள் மூலம் சமூக வலைத்தளங்களில் ட்ரோலிர்க்கு உண்டாகும் சரவணனுக்கு அவரது கட்சியை சேர்ந்தவர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர், இன்னும் ஒரு சிலரோ நிதானமாக திட்டமிட்டு செயல்படுங்கள் எனவும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இந்த ஆண்டு தை பொங்கல் யாருக்கு சிறப்பாக இருந்ததோ இல்லையோ மாநிலம் முழுவதும் எழும் பொங்கல் பரிசு பொருட்கள் குற்றசாட்டால் எதிர்க்கட்சிகளுக்கு சிறப்பாக அமைந்துள்ளது.

More watch videos