Tamilnadu

அண்ணாமலைக்கு "எச்சரிக்கை" விடுத்த பத்திரிகையாளர் மன்றத்தின் நோக்கத்தை "வெளிப்படுத்திய" பிரபல அரசியல் விமர்சகர்.. !

K annamalai
K annamalai

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீப காலமாக நடைபெறும் முக்கிய சம்பவங்கள் ஆர்ப்பாட்டம் குறித்து தனது கருத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து வருகிறார் குறிப்பாக ஆர்ப்பாட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்திக்கும் போது செய்தியாளர் எழுப்பும் கேள்விக்கு நெற்றி பொட்டில் அடித்தது போன்று பதில் அளித்து வருகிறார்.


முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்ப முயன்ற தனியார் தொலைக்காட்சி பெயரை கூறி கடுமையான பதிலடி கொடுத்தார் அண்ணாமலை அத்துடன், சென்னையில் முதல்வர் தொகுதியான கொளத்தூரில் ஆய்வு மேற்கொண்ட அண்ணாமலை வீடீயோவையோ ட்ரோல் செய்த ஆங்கில ஊடகத்தை சேர்ந்த பத்திரிகையாளர் பற்றி வரும் காலங்களில் முக்கிய தகவல்கள் வெளிவரும் எனவும் குறிப்பிட்டார் அண்ணாமலை.

இப்படி அண்ணாமலை அதிரடி மேல் அதிரடி கொடுத்து கொண்டு இருக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து மாற்றத்திற்கான பத்திரிகையாளர் சங்கம் என்ற ஒரு பத்திரிகையாளர் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது, அதில் குறிப்பிட்டவை பின்வருமாறு :-

பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் வகையிலும், அவர்களை அவமானப்படுத்தும் வகையிலும் நடந்துகொள்ளும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எச் ராஜா போன்றோரை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்தப்போக்கை அவர்கள் உடனடியாக கைவிடாவிட்டால் அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க ஆவண செய்வோம் என்றும் எச்சரிக்கிறோம்.

பத்திரிகை ஆசிரியர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பிவரும் இதுபோன்றோரை வன்மையாக கண்டிப்பதுடன், அவர் மீது தமிழ் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (Editors Guild) உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் எனவும் நீண்ட அறிக்கை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த தகவலை மேற்கோள் காட்டி பிரபல அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் சேஷாத்திரி தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அதில், ஊடகங்கள் அண்ணாமலையை புறக்கணிக்கவும் முடியவில்லை அவரது பேட்டியை முழுமையாக ஒளிபரப்பு செய்யவும் விருப்பம் இல்லை ஆனால் அவற்ரை மீறி அண்ணாமலை சமூக ஊடகங்கள் மூலம் முன்னேறி செல்கிறார்.

அண்ணாமலை சரியான பாதையில் செல்கிறார், முன்பு தமிழிசையை இதே போன்று ஊடகங்கள் கார்னெர் செய்தனர் தமிழிசை அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ஆனால் அண்ணாமலை சரியான முறையில் குறிப்பிட்ட ஊடகவியலாளர்களை அடையாள படுத்துகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை தனியார் ஊடகம் ஒன்றன் பெயரையும், சில குறிப்பிட்ட பத்திரிகையாளர்கள் பெயரையும் குறிப்பிட்டு பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடதக்கது.