மதிமுக பொது செயலாளர் வைகோ எனக்கு தீபாவளி வாழ்த்து சொல்லத்தான் போனில் அழைக்கிறார் என நான் நினைத்தேன் ஆனால் அவர் என்னை மிரட்டினார் சரி பெரியவர் என நானும் அமைதியாக இருந்துட்டேன் என திமுக எம். எல்.ஏ பரிதாபமாக பேசிய ஆடியோக்கள் வைரலாகி வரும் சூழலில் இவரை போய் வைகோ மிரட்டி இருக்காரே என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தி.மு.க வெற்றிபெற்ற சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் மக்களின் தேவைகளை நிறைவேற்ற முதல்வரின் அறிவுறுத்தலின்படி பணியாற்றுகிறேன். தொகுதியில் மக்களின் தேவைகளை நிறைவேற்ற முதல்வரிடம் கோரிக்கை விடுத்துவருகிறேன்.
அதன்படி, குருவிகுளம் ஒன்றியத்திலுள்ள சாயமலை என்ற இடத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தரம் உயர்த்தி மருத்துவமனையாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததால், அது தொடர்பாக அமைச்சரிடம் பேசினேன்.
அதைத் தொடர்ந்து அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தரம் உயர்த்துவது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மதிப்பீடு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.இதற்கிடையில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தன் சொந்த ஊரான கலிங்கப்பட்டியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தரம் உயர்த்த திட்டமிட்டிருந்திருக்கிறார்.
அது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால், திடீரென செல்போனில் தொடர்புகொண்ட அவர், 'இந்தத் தொகுதியில் நீ வெற்றிபெற நான் பிரசாரம் செஞ்சிருக்கேன். அதற்கு எனக்குக் காட்டும் நன்றி இதுதானா?' எனக் கடுமையாகப் பேசினார். தொலைத்து விடுவேன் எனவும் எச்சரிக்கை செய்தார், சரி பெரியவர் என நாம் எதுவும் பேசக்கூடாது என விட்டுவிட்டேன்.
இது குறித்து மாவட்டம் கிட்ட சொன்னேன், அதன் பிறகு தலைமையில் இருந்து அழைத்து கேட்டார்கள் நான் என்ன நடந்தது என சொன்னேன் அவ்வளவுதான் என அமைதியான குரலில் பேசுகிறார், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜா, இதுகுறித்து தனியார் யூடுப் மீடியா ஒன்று ஆடியோ உரையாடல்களை வெளியிட்டுள்ளது.
அவை கீழே இணைக்கப்பட்டுள்ளது.