Tamilnadu

அஜித் டோவல் தலைமையில் நடைபெற்ற கூட்டம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது தீர்மானம் !

ajith doval
ajith doval

இந்திய பாதுகாப்பு செயலர் அஜித் டோவல் தலைமையில் ஆஃப்கானிஸ்தான் - தாலிபான் அரசு பற்றிப் பேச்சுவார்த்தை இரு தினங்களுக்கு முன் டில்லியில் நடந்தேறியது. அதில் ரஷ்யா, கிர்கிஸ்தான், கஸக்ஸ்தான், ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பு செயலர்கள் கலந்து கொண்டனர்.


முடிவில், "ஒரு மனதாக" தீர்மானம் நிறைவேற்றினர், "ஆஃப்கன் மக்களுக்கு உதவ வேண்டும், ஆஃப்கானிஸ்தான் நாட்டை பயங்கரவாதிகள் உபயோகிக்காமல் தடுக்க வேண்டும்" உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

இதில் பங்கெடுக்க சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு  இந்தியா அழைப்பு விடுத்திருந்தாலும், அவை பங்கெடுக்கவில்லை. சீனாவுக்கு 'முன் அலுவல் / வேறு வேலை' இருந்ததால் வரவில்லை என்றும் பாகிஸ்தான் வந்தால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டிய நிலை வரும் என்ற ரீதியில் பாகிஸ்தான் நழுவியதாக கூறப்படுகிறது.

தாலிபான் அரசை அங்கீகரிக்காத இந்தியா, இந்த கூட்டத்துக்கு தாலிபான்களை அழைக்கவில்லை. என்றாலும், இந்த கூட்டத்தின் தீர்மானங்களை தாலிபான் வரவேற்றுள்ளது, "எங்கள் மக்களுக்கு உதவுங்கள்" என்று கோரிக்கை வைத்துள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தானும் சீனாவும் நேற்று ஒரு கூட்டம் நடத்தின, அதில் தாலிபானும் பங்கெடுத்தது அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளிப்படையாக தெரியவில்லை. 

இதற்கு முன்னர் அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு செயலரும், பிரிட்டிஷ் பாதுகாப்பு செயலரும் ஏற்கனவே இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜித்டோவலை சந்தித்து, ஆஃப்கானிஸ்தான் பற்றி தனியே ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

"வெளியுறவு" விவகாரங்களில் இந்தியா தலைமையில் கூட்டு முயற்சி நடைபெறுவது இதுவே முதல் முறை என செல்வ நாயகம் கருத்து தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் ஆப்கன் அரசியலில் இந்தியா நடத்திய ஆலோசனை என்ன மாற்றத்தை சந்திக்க இருக்கிறது என வரும் காலங்களில் அறிந்து கொள்ளலாம்.