வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் பாஜக தமிழகம் முழுவதும் மிகத் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பாரத பிரதமர் கொண்டு வந்த திட்டங்கள் குறித்தும் மத்திய அரசின் மேலும் பல முக்கியத் திட்டங்கள் குறித்தும் வீடுதோறும் சென்று எடுத்துரைத்து வருகின்றனர் பாஜக வேட்பாளர்கள். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினரமான வானதி சீனிவாசன்,
"கட்சியின் சார்பில் 100 இடங்களில் 58 சதவீத இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 50 சதவீதத்கும் மேலாக அதிகமான பெண்களை பாரதிய ஜனதா கட்சி இம்முறை தேர்தலில் நிற்க வைத்து இருப்பதை நாங்கள் ஒரு நல்ல முயற்சியாக பார்க்கிறோம். மகளிரணித் தலைவர் என்ற முறையில் இதற்காக மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களுக்கு நான் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன்.
தேர்தல் களத்தில், மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி அவருடைய திட்டங்களை எல்லாம் எப்படி மக்களுக்கு எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் குறிப்பாக எந்த கையூட்டும் இல்லாமல் நேர்மையாக தாங்கள் எடுத்துச் செல்லப் போகிறோம் என்பது தான் எங்களது அடிப்படை குறிக்கோள்.
கழிப்பிடம் கட்டுவது, வங்கி கணக்கு துவங்குவது முதற்கொண்டு பெண்களுக்காக பல்வேறு திட்டங்கள் இருக்கிறது. அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், பெண்கள் பெயரில் வீடுகளை கட்டிக் கொடுப்பதில் இருந்து, சுய உதவி திட்டம், முத்ரா கடன் திட்டம் உள்ளிட்ட பெண்களுக்கான திட்டங்கள் குறித்தும், சுய உதவிக்குழுவில் பெண்கள் 20 லட்ச ரூபாய் வரை கடன் உதவி அளிக்க கூடிய திட்டம் என்று பல்வேறு திட்டங்களை எல்லாம் அடித்தட்டுப் பெண்கள் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி கொடுத்திருக்கிறார். அவையெல்லாம் எங்களுடைய வேட்பாளர்களை ஒவ்வொரு வீட்டிற்கும் குறிப்பாக பெண்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
எங்களுடைய பெண் வேட்பாளர்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் ஒவ்வொரு வீட்டிற்குள் நுழைந்து அந்த வீட்டில் இருக்கக் கூடிய பெண்களின் சமையலறை வரை சென்று பார்த்து, உங்கள் வங்கிக் கணக்கில் பணம் போட்டது பிரதமர் மோடி என்றும், இலவசமான ரேஷன் பொருட்களை கொடுத்தது மோடி என்றும், இன்று மூன்றாவது அலையின் தாக்கத்தை நாம் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்க காரணம் தடுப்பூசி, அதற்கான முழு முயற்சியும் திறம்பட எடுத்தவர் மோடி என்றும் மக்களுக்கு எடுத்துரைக்கின்றனர். இதனை எல்லாம் பார்க்கும் போது, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக பெரிய ஆள் பலம் பண பலத்தையும், அதிகார பலத்தையும் எதிர்த்து நாங்கள் மக்களுக்காக களத்தில் இறங்கி இருக்கிறோம்.
அதே போன்று 7.5 சதவீதம் இட ஓதுக்கீடு மூலம் 600 கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு மூலம் சீட் பெற்று உள்ளனர். மோடி அவர்கள் தமிழகத்திற்கு புதிய மருத்துவ கல்லூரி கொடுத்ததால்.. 3 மடங்கு சீட் அதிகரித்து உள்ளது. மத்திய அரசு 60 சதவீத நிதியை மருத்துவ கல்லூரி கட்டிடத்திற்காக கொடுக்கிறது. எனவே அரசியலுக்காக ஒரு ஆயுதமாக திமுக நீட் தேர்வை பயன்படுத்துகிறது அவ்வளவுதான்.
மேற்கு வங்கத்தை பொருத்தவரையில் முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டதன் பேரிலேயே கவர்னர் சட்டமன்றத்தை முடக்கினார். இந்த விபரம் கூட தெரியாமல் முந்திக்கொண்டு ஆளுநருக்கு எதிராக கண்டனக் குரலை எழுப்பி இருந்தார் முதல்வர். எதற்கு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்பது கூட முதல்வருக்கு தெரியவில்லை. ஆனால் இவர்கள்தான் சமூக நீதியை பற்றி பேசுகின்றனர் என குறிப்பிட்டு உள்ளார் வானதி சீனிவாசன்.
More Watch Videos