தமிழக ஆளுநர் மற்றும் பிரதமரை சீண்டுவது தமிழக அரசுக்கு நல்லதல்ல என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தீவிர பிரச்சாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார். அண்ணாமலை பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் காட்டும் ஆதரவு, பாஜகவிற்கு தமிழகத்தில் மிகப்பெரிய வரவேற்பு இருப்பதை காட்டியுள்ளது. தஞ்சாவூரில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக அரசின் முகமூடியை கிழித்துள்ளார்.
நகைக்கடன் ரத்து, பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை என நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சி கட்டிலில் அமர்ந்த திமுக, உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயம் மண்ணைக் கவ்வும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக அரசு மாதம் ஒருமுறை எதையாவது கையில் எடுத்துக்கொண்டு மக்களை திசை திருப்பி வருவதை அண்ணாமலை தெளிவாக சுட்டிக்காட்டினார். கடந்த மாதம் குடியரசுத்தின அணிவகுப்பில் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு, அதை மக்கள் மறந்தவுடன் நீட் பிரச்னையை எடுத்து பேசுகின்றனர்.
இப்படி மக்களை ஏமாற்றுவதற்காக திமுக அரசு தன் மீது மக்கள் வைத்துள்ள வெறுப்பை மடைமாற்றுவதற்காக மாதம் ஒரு விஷயத்தை வைத்து அரசியல் செய்வதாக சாடினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த, “தமிழக ஆளுநர், பிரதமரை சீண்டுவது போன்றவை பொறுப்புமிக்க அரசுக்கு அழகல்ல. எனவே வருகிற தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என எச்சரித்தார். கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக மீனவர் மீது எங்கேயும் துப்பாக்கிச்சூடு இல்லை.
இத்தனை காலம் பிரச்சினை இல்லாத நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இப்போது எப்படி வருகிறது. எனவே, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இது ஏன் தொடர்ந்து நடைபெறுகிறது என அவர்கள்தான் ஆத்மார்த்தமாக சொல்ல வேண்டும். என்றாலும், அனைத்து மீனவர்களையும் மீட்டுக் கொண்டு வந்து விடுவோம்” என உறுதியளித்தார். இந்த பிரச்சார கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பாஜகவினர் மற்றும் மக்கள் திரளாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
More Watch Videos