நாளுக்கு நாள் கொரானாவால் பாதிப்பு அதிகமாகி வரும் இந்த வேளையில் மேலும் ஒரு தடுப்பு மருந்துDRDOசார்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..
ஏற்கனவே கோவேக்சின் கோவிஷீல்டு ஆகிய மருந்துகள் தடுப்பூசி வடிவில் நடைமுறையில் உள்ளது..மேலும் மக்கள் பயன்படுத்த இலகுவாக பவுடர் வடிவில் மருந்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
மே17 இன்று மத்திய அமைச்சர்கள் இருவரும் டியாக்ஸி டி க்ளுகோஸ் எனும் பவுடர் மருந்தை அறிமுகம் செய்தனர்.சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரும் இந்த மருந்தை அறிமுகம் செய்தனர்.
DRDO வின் கடும் முயற்சிக்கு பலனாகஎளிய முறையில் பயன்படுத்த பொடி வடிவில் கொரானாவுக்கு மருந்து கண்டறியப்பட்டுள்ளது.2டிஜி என பெயரிடப்பட்ட இந்த மருந்து சாதாரண நீரில் கரைத்து உட்கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது.
இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த வாரம் இந்த மருந்துக்கு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.இந்த பவுடரை தீவிர சிகிச்சைபிரிவில் இருப்பவர்கள் மற்றும் வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டவரும் பயன்படுத்தலாம் என ICMR கூறியுள்ளது. இந்திய மருத்துவத்தில் இந்த மருந்து ஒரு மைல்கல் என பல மருத்துவர்கள்கருத்து தெரிவித்து வருகின்றனர்.