ஒருவரை ஐஸ் வைக்க வேண்டும் என்றால் எந்த நிலைக்கும் செல்லும் நபர் தமிழன் பிரசன்னா என்ற விமர்சனங்கள் சொந்த கட்சிக்கு உள்ளேயே எழுந்துள்ளது, திமுகவின் அதிகார பூர்வ செய்தி தொடர்பாளர்களில் ஒருவராக இருப்பவர் பிரசன்னா இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னை தமிழன் பிரசன்னா என்ற அடை மொழியுடன் அழைத்து கொண்டார்.
கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த பிரசன்னாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது, தொடர்ந்து ஆண்டாள் நாச்சியார் விவகாரத்தில் சர்ச்சையாக பேசியது, இந்து மத தெய்வங்களை விமர்சனம் செய்தது, caa போராட்டத்தின் போது இஸ்லாமியர்களிடம் காசு வாங்கி கொண்டு பொது கூட்டத்தில் கலந்து கொண்டதாக கல்யாண சுந்தரம் குற்றம் சாட்டியது உள்ளிட்ட பல காரணங்களால் பிரசன்னாவிற்கு சீட் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் சட்ட மேலவை கொண்டுவருவதாக உறுதி அளித்தது, அதன் முன்னெடுப்பாக உள்ளாட்சி தேர்தலுக்கு பின்பு சட்ட மேலவை கொண்டுவர திமுக முயல்வதாகவும் அதில் தனக்கும் ஒரு இடம் வேண்டும் என்பதற்காக பிரசன்னா தொடர்ந்து ஸ்டாலின் செல்லும் இடங்களுக்கு முன்பே சென்று அவரை வரவேற்க களத்தில் நிற்கிறாராம்.
இதே போன்று சட்டசபையில் ஸ்டாலின் கட் அவுட் ஒன்று நுழைவு வாயிலில் வைக்கப்பட்டது அதன் அருகே நின்று போட்டோ எடுத்த பிரசன்னா, இங்கு இத்தனை நாள் ஊழல் குற்றவாளி புகைப்படம் இருந்தது இப்போது ஸ்டாலின் புகைப்படம் இருக்கிறது இதை பார்க்கவே பெருமையாக உள்ளது என ஒரு பதிவை போட்டிருந்தார், இந்த கருத்து தலைமை செயலாளர் மூலம் ஸ்டாலின் கவனத்திற்கு சென்றுள்ளது.
திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது இங்கு யாரும் கட் அவுட் வைக்க கூடாது என மனு கொடுத்தீர்கள் இப்போது உங்கள் கட் அவுட் இடம்பெற்றால் சர்ச்சை உண்டாகும் என தெரிவிக்க உடனடியாக கட் அவுட்டை நீக்க சொல்லி இருக்கிறார் ஸ்டாலின், மேலும் புகழுவதாக எனக்கு வேதனையை உண்டாக்க வேண்டாம் என பொதுவாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் தமிழகத்திற்கு கூடுதல் ஆக்சிஷன் வேண்டும் என முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் மத்திய அரசிற்கு கோரிக்கை வைக்க, மத்திய அரசும் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று ஆக்சிஷன் அளவை அதிகரித்தது. இதனை பலரும் பாராட்டி கொண்டு இருக்க பிரசன்னா தனது முக நூலில் கேட்பார் கேட்டால் வரவேண்டியது வரும் என மத்திய அரசின் உதவியை கூட கிண்டல் செய்திருந்தார்.
இதனால் அமைதியாக இருந்த பாஜகவினர் மீண்டும் திமுகவை விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர், இந்த சூழலில் புதிய கல்வி கொள்கை குறித்த கருத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை விமர்சனத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார் பிரசன்னா.
இன்று புதிய கல்வி கொள்கை குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் மாநில அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் செய்தார், அப்போது தமிழகத்தில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை என்ற செய்தி வெளியானது , இதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், நாங்கள் கல்வித்துறை அமைச்சகத்திற்கு விளக்கம் கேட்டு அனுப்பிய ஈமெயிலிர்க்கு பதில் வராத காரணத்தால் கூட்டத்தை புறக்கணித்து இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் பிரசன்னவோ எம் மாநிலத்தில் கல்விக்கான கொள்கை முடிவில் நீங்கள் எப்படி தலையிட முடியும்,எம் மண்னுக்கான கல்வி கொள்கை ஒரு போதும் காவிக்கொள்கையாக இருக்கமுடியாது மாநில சுயாட்சிக்கான முதல்வர் எங்கள் தலைவர் முக.ஸ்டாலின் என கூறி மீண்டும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளார், புதிய கல்வி கொள்கையை மாநில அரசுகள் ஏற்று கொள்வதை தவிர வேறு வழியில்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இப்படி இருக்க தற்போது புதிய கல்வி கொள்கையை ஏற்கமாட்டோம் என சொல்லிவிட்டு பின்பு, புதிய கல்வி கொள்கையை ஏற்றால் அது திமுகவிற்கு எதிராகத்தான் முடியும் என அறிந்த திமுக பள்ளி கல்வித்துறை அமைச்சரே அடக்கி அமைதியாக கருத்து தெரிவிக்கும் நிலையில் புகழுவதாக எண்ணி அன்பில் மகேஷ் மற்றும் திமுக அரசாங்கத்தை கோர்த்து விட்டுள்ளார் பிரசன்னா என்ற விமர்சனம் தற்போது அனைத்து மட்டத்திலும் எழுந்துள்ளது.
ஏற்கனவே அழகிரி குறித்தும் அவர் மகன் குறித்தும் சர்ச்சையாக கருத்து தெரிவித்து சில காலம் ஓரம் கட்டப்பட்டவர் பிரசன்னா என்ற ஒரு கருத்தும் முன்பே பரவலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.