Tamilnadu

விடியலும் இல்லை வெங்காயமும் இல்லை ஒன்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு கடும் எதிர்ப்பு !

Gobackstalin
Gobackstalin

தமிழக ஒன்றிய முதல்வர் ஸ்டாலின் இன்று கொரோனா பெரும் தொற்று குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், பணிகளை பார்வையிடவும் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார், இந்நிலையில் தொடர்ந்து திமுக ஆட்சி அமைந்தது முதல் கொங்கு மண்டலம் புறக்கணிக்க படுவதாக கோவை மக்கள் குற்றசாட்டு கூறிவருகின்றனர்.


திமுக அரசு கோவை மக்கள் கொரோனா பெரும் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை குறைத்து வழங்கி கோவையை புறக்கணிப்பதாகவும், திமுகவிற்கு ஆதரவாக வாக்களித்த பகுதிகளில் தடுப்பூசி விநியோகத்தை அதிகரித்து வழங்கி வருவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஒன்றிய முதல்வர் ஸ்டாலின் கொங்கு மண்டலத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு திரும்பி போ ஸ்டாலின் (GOBACKSTALIN ) என கோவை மக்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர், இந்த #டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

பிரதமர் மோடி தமிழகம் வரும்போது GOBACKMODI என திமுக ட்ரெண்ட் செய்த நிலையில் தற்போது சொந்த மாநிலத்திற்கு உள்ளே செல்லும் முதல்வர் ஸ்டாலினுக்கு சொந்த மாநில மக்களே எதிர்ப்பு தெரிவித்து வருவது, அரசியல் வட்டாரத்தில் கடும் சிக்கலை திமுகவிற்கு கொடுத்துள்ளது. விடியல் கிடைக்கும் என வாக்களித்த மக்களுக்கு விடியலும் கிடைக்கவில்லை லாக் டவுன் காரணமாக வெங்காயமும் கிடைக்கவில்லை என மக்கள் வேதனை படும் சூழலே தற்போது நிலவுகிறது 

(பல்வேறு மாநிலங்கள் ஒன்றிணைந்த நாடு தான் இந்தியா எனவே மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்போம் என தெரிவித்தது போன்று, பல்வேறு மாவட்டங்கள் ஒன்றிணைந்த மாநிலம் தான் தமிழ்நாடு எனவே ஒன்றிய முதல்வர்  என குறிப்பிடபட்டுள்ளது )