Cinema

கேரளாவில் வைரமுத்து விரட்டி அடிப்பு!

Vairamuthu
Vairamuthu

கடந்த 2019 ம் ஆண்டு சென்னையில் கவிஞர் வைரமுத்துவிற்கு தனியார் பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க இருந்தது, இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் கையால் விருதினை வைரமுத்து பெற போவதாக அறிவிப்பு வெளியானது.


இந்த சூழலில் ஆண்டாள் நாச்சியார் குறித்து வைரமுத்துவின் அவதூறான பேச்சு, பாடகி சின்மயி கொடுத்த பாலியல் புகார் ஆகியவற்றால், எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து கடைசி நேரத்தில் ராஜ்நாத் தனது பயணத்தை கேன்சல் செய்தார், இது இந்திய அளவில் வைரமுத்துவிற்கு பெருத்த அவமானத்தை உண்டாக்கிய நிலையில் தற்போது மேலும் ஒரு விரட்டி அடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஓஎன்வி குறுப் விருது என்பது ஞானபீட விருது பெற்ற ஓஎன்வி குறுப் பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவரும் இலக்கிய விருதாகும். இந்த ஆண்டிற்கான விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு அளிக்கப்பட்டது.வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்ளிட்ட 18 திரையுலக பிரபலங்கள் சிலர் பாலியல் சீண்டல் புகார்கள் அளித்திருந்த நிலையில், பெருமைக்குரிய இந்த விருதை அவருக்கு அளித்தது குறித்து தமிழிலும் மலையாளத்திலும் பல்வேறு தரப்பினர் கேள்விகளை எழுப்பினர்.

மலையாளத் திரையுலகைச் சேர்ந்த உமன் இன் சினிமா கலெக்டிவ், பாலியல் குற்றசாட்டு உள்ளிட்ட பல்வேறு புகார்களை எதிர்கொள்ளும் வைரமுத்துவுக்கு இந்த விருது எப்படி அளிக்கப்பட்டது என்பது குறித்து கேள்வியெழுப்பியது. நடத்தை கெட்ட நபருக்கு விருது அளிக்கலாமா என்றும் கேள்வி பல தரப்பிலும் எழுந்தது.

இந்த விருது வைரமுத்துவுக்கு அளிக்கப்பட்டது குறித்து நடிகை பார்வதி கவிஞர் தாமரை உள்ளிட்டோர் கடுமையான விமர்சனங்களை எழுப்பினர்.வைரமுத்துவின் எழுத்துகளுக்காகவே இந்த விருது அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவருடைய நடத்தை ஆராய்வது தங்கள் நோக்கமல்ல என்று ஓஎன்வி குறுப் கல்சுரல் அகாடமியின் தலைவரும் இயக்குனருமான அடூர் கோபலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.ஆனாலும் எதிர்ப்புகள் தொடர்ந்த நிலையில், மே 28ஆம் தேதி ஓஎன்வி கல்சுரல் அகாதெமியின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விருது குறித்து மறு பரிசீலனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் வைரமுத்துவிற்கு அளிக்கப்பட்ட விருது திரும்ப பெறப்படலாம் என கூறப்படுகிறது, தமிழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெற இருந்த வைரமுத்து விரட்டி அடிக்க பட்ட நிலையில் தற்போது தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவிலும் மலையாளிகளால் விரட்டி அடிக்கப்பட்டு வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்ட விருது மறு பரிசீலனை செய்யப்படும் என்ற அறிவிப்பு வைரமுத்துவிற்கு பலத்த அவமானத்தை தேடி தந்துள்ளது.

தன் மீது கூறப்பட்ட பாலியல் புகர்களில் இருந்து வைரமுத்து தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை அவருக்கு எந்த விருதும் அளிக்க கூடாது என்பதே பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக உள்ளது.