தமிழக அரசியல் ஒரு நாளைக்கு ஒரு கட்டத்தில் செல்கிறது கிட்டத்தட்ட அரசியல் என்பதே சமூக வலைத்தளங்கள் வசமாகியது என்பது நேற்றைய தினம் அரசியலை கூர்ந்து கவனித்தவர்களுக்கு தெரிந்து இருக்கும், பாஜகவை சேர்ந்த வேட்பாளர் ஒரு ஓட்டு மட்டுமே வாங்கினார் என முழுவதும் விவரம் அறியா அரைகுறை நிருபர் ஒருவர் பத்திரிகையாளர்கள் இருக்கும் வாட்ஸாப் குழுவில் தகவலை பகிர அது உண்மையா என்பதை ஆலோசனை செய்யாமல் 24 மணி நேர தொலைக்காட்சி நிறுவனங்களும் பகிர்ந்து இப்போது கடும் சிக்கலில் சிக்கியுள்ளனர்.
ஒரு வாக்கு வாங்கியவர் சுயேட்சையாக போட்டியிட்டார் எனவும் அவரது குடும்பத்தினருக்கு அந்த வார்ட்டில் வாக்கு இல்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ள சூழலில் நேற்று போலி செய்தியை பகிர்ந்த ஊடகங்களை வசமாக பாஜகவினர் வைத்து செய்து வருகின்றனர். இந்த சூழலில் நேற்றைய பாஜக தலைவர்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு தற்போது கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
எந்த வாட்சாப் குழுவில் பாஜக வேட்பாளர் ஒரு வாக்கு வாங்கினார் என செய்திகளை பரப்பினரோ அதே குழுவில், பாஜக தலைவர் அண்ணாமலை கொஞ்சமாவது காமன்சென்ஸ் இருக்கிறதா? என பத்திரிகையாளர்களை பார்த்து கேட்கிறார், அருகில் நின்ற H ராஜா சிரிக்கிறார் என ஒருவர் வேதனையுடன் தெரிவித்து இருக்கிறார்.
இந்த தகவலை மையமாக வைத்து அண்ணாமலை, போலி தகவலை உறுதி படுத்தாமல் கேள்வி எழுப்பிய நபரை காமன்சென்ஸ் இருக்கா என கேட்ட விடியோவையும், மேலும் H.ராஜா நக்கலாக சிரித்த விடீயோவையும் பகிர்ந்து மேலும் மேலும் இடதுசாரிய சிந்தனை கொண்ட பத்திரிகையாளர்களை வெறுப்பேற்றி என்ஜாய் செய்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக ஊடகங்கள் நேற்று கார்த்தி என்பவருக்கு குடும்பத்தினர் கூட வாக்கு அளிக்கவில்லை என போலியாக வெளியிட்ட செய்தியை இன்று டெலிட் செய்து வரும் நிலையில் 24 மணி நேர ஊடகங்கள் மற்றும் போலியாக செய்தி பரப்பிய செய்தியாளர்களை பங்கம் செய்து வருகின்றனர்.
H.ராஜா சிரித்த வீடியோவை பார்க்க .கிளிக் செய்யவும்.