தமிழகத்தில் கோவில்களை முழுமையாக திறக்கவேண்டும் என ஒருபக்கம் போராட்டம் நடந்துகொண்டு இருக்க மறுபக்கம் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் திருநீர் மற்றும் ருத்திராஜம் அணிந்து பள்ளிக்கு சென்றதால் ஆசிரியரால் மிரட்டப்பட்டு ,பள்ளியில் உள்ள மொத மாணவர்களை வரிசையில் நிறுத்தி திருநீர் பூசி சென்ற மாணவர்களை அவமானப்படுத்தும் சூழல் உண்டாகியுள்ளது.
இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்து பாதிக்கப்பட்டு தங்களுக்கு நீதி கேட்டு காத்து இருக்கின்றனர் பெற்றோர் தங்கள் மனுவில் அவர்கள் குறிப்பிட்டதாவது எங்களது மகன்கள் கிருபாகரன்மற்றும் கிருபானந்தன் ஆகிய இருவரும் காஞ்சிபுரத்தில் உள்ள ஆந்திரசன் மேல்நிலை பள்ளியில் 10வகுப்பு D2 பிரிவில் படித்து வருகிறான்.
இவர்களது கழுத்தில் கண்டமணி (ருத்ராச்சம்) மற்றும் நெற்றியில் சைவசின்னமாமம்திருநீரு அணிந்து சென்றதால் வகுப்பு ஆசிரியர் ஜாய்சன் என்பவர் கழுத்தில் (ருத்ராச்சம்) கண்டமணியும், திருநீறும் அணியக்கூடாது என்றும் பொறுக்கி, ரவுடிதான் அணிந்திருப்பான் சைவ சின்னம் அணிந்தவர் எல்லாம்ஒழுக்கம் இல்லாதவர்கள் என்று வகுப்பறைக்குள் நுழையவிடாமலும், மிககொடுரமான முறையில் அடித்தும் இவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும் முதுகில் முழங்கையால் குத்தியுள்ளார்.
அனைத்து மாணவர்களையும் அழைத்து தலையில் குட்ட சொல்கிறார். ஆதனால் இருவரும் பள்ளிக்குசெல்ல மறுக்கிறார்கள் பயமாக உள்ளது நாங்கள் பள்ளிகூடம் போகமாட்டோம் என கூறுகிறார்கள். எனவே மேற்காணும் செயலுக்கு பள்ளி நிர்வாகத்தின் மீதும், ஆசிரியர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கும்படி மிகதாழ்மையுடன் வேண்டுகிறோம். என குறிப்பிட்டுள்ளனர் , பாதிக்கப்பட்ட பெற்றோர் என தங்கள் பிள்ளைகளை அடித்தீர்கள் என கேட்க அப்படிதான் அடிப்போம் என கூறியுள்ளார் .
இந்நிலையில் கோபால் என்பவர் பள்ளிக்கு சென்று நீதி கேட்க ஆசிரியர் ஜாய்சன் முறையான பதிலளிக்கவில்லை மேலும் பள்ளி நடத்துகிறீர்களா ? மதமாற்றம் செய்கிறீர்களா என மாணவர் தரப்பில் கேட்க மாணவர்கள் பள்ளிக்கு படிக்க வருகிறார்களா திருநீர் அணிந்து மதத்தை பரப்ப வருகிறார்களா எனவும் ஆணவமாக பேசியுள்ளார் , இதற்கு முறையான அப்பதிலடி கொடுத்த சிவனடியார் பள்ளியில் எதற்கு சிலுவை உண்மையில் மத்தை பரப்புவது யார் என கேட்க அமைதியாக இருந்து இருக்கிறார் ஆசிரியர் .
இந்தியாவிற்கு மதமாற்ற வந்த ஜியூ போப் வீரமாமுனிவராகத்தான் திரும்பி சென்றார் நினைவில் கொள் எனவும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார் இந்நிலையில் மாணவர்கள் முன்னிலையில் இரண்டு மாணவர்களிடம் தவறாக நடந்த ஆசிரியர் மீது முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் , பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் நீதி கேட்ட கோபால் என்பவர் நமக்கு பிரத்தியேக தகவல் கொடுத்துள்ளார் .
இதுகுறித்து tnnews24 நிருபர் கோபால் அவர்களிடம் பேசிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது . பார்க்க கிளிக் செய்யவும்