தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரது தந்தை கருணாநிதியுடன் இருக்கும் செய்தி ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கிண்டல் அடித்துள்ளார்.
H. ராஜா பகிர்ந்த புகைப்படத்தில். சென்னையில் 633 கோடி செலவில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணியை தமிழக முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார் என்று இடம்பெற்றுள்ளது, இந்த புகைப்படத்தை பகிர்ந்த H ராஜா., அன்று 633 கோடியில் மழைநீர்வடிகால் கால்வாய் அமைக்கும் பணி கருணாநிதி அவர்களால் துவங்கி வைக்கப் பட்டது என்ன ஆயிற்று.
சிங்காரச் சென்னை என்று வாக்குறுதி அளித்து திரு.ஸ்டாலின் 3 ஆண்டுகள் மேயராக இருந்தார். ஆனால் இன்று மழை நீரில் மூழ்கும் sink ஆர சென்னையை தான் பார்க்க முடிகிறது என கிண்டல் அடித்துள்ளார்.
தொடர்ந்து பலரும் சென்னையில் ஒரு நாள் மழைக்கே நீர் தேங்கியதை கேள்வி எழுப்பி வருகின்றனர், குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையை தங்கள் கோட்டை என சொல்லி கொள்பவர்கள் இப்படி ஓட்டையாக வைத்து இருப்பார்கள் என நினைக்கவில்லை என கூறினார்.
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்ய கிளம்புவதாக வீடியோ வெளியிடுவதை நிறுத்திவிட்டு செயலில் இறங்கவேண்டும் என குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இப்படி பல தரப்பிலும் தமிழக அரசிற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருவதால் ஜனவரியில் நடத்தலாம் என்று இருந்த நகராட்சி மாநகராட்சி தேர்தல்களை ஆளும் திமுக அரசு தள்ளிவைத்து நிவாரண உதவிகள் வழங்கிய பின்பு வைத்து கொள்ளலாம் என முடிவு செய்துள்ளதாம்.