Tamilnadu

ஆள பாத்து "அனுப்பு" என 100 நூறாய் கொடுத்த மஸ்தான் என்ன இது அண்ணாமலை கேள்வி

mastha stallin  and annamalai
mastha stallin and annamalai

திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் 100 ரூபாய் நோட்டுகளை காரில் இருந்தப்படியே பொது மக்களுக்கு வழங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகிய பரபரப்பை உண்டாக்கிய நிலையில் அமைச்சர் மஸ்தான் செயல்பாடுகள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.


இதுகுறித்து அண்ணாமலை எழுப்பிய கேள்வி பின்வருமாறு :- திமுகவைச் சேர்ந்த அமைச்சர் திரு செஞ்சி மஸ்தான் அவர்கள் பொதுமக்களுக்கு 100 ரூபாய் விநியோகித்துக் கொண்டிருக்கிறார்.

மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் தினமும் 300 நபர்களுக்கு செய்து கொண்டிருக்கிறார். மந்திரியாக அவர் தான் ஈட்டிய பணத்தை மக்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு இவ்வாறு செய்வதா? அரசாங்கம் தோல்வி அடையும்போது அவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை.

தற்போது அமைச்சர் மஸ்தானின் செயல்பாடு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது, மேலும் ஆளை பார்த்து அனுப்பு என வீடியோவில் பேசப்படும் வார்த்தைகளும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது  அதிலும் குறிப்பாக ஆட்களை பார்த்து அனுப்பு என பேசியது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது, திமுகவினரை குறிப்பிடுகிறாரா?

இல்லை வாக்கு வங்கி உள்ள ஆட்களை பார்த்து அனுப்பு என குறிப்பிடுகிறாரா? என்ற விமர்சனமும் அதிகரித்துள்ளது, மக்களை 100 ரூபாய்க்கு கார் வாசலில் நின்று கையேந்தவைத்த  பரிதாப நிலைதான் தற்போதைய அரசாங்கத்தின் சாதனையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது?

வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.