தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர் ஈஸ்வரன், கொங்கு மண்டலத்தை சேர்ந்த இவருக்கு கூட்டணி அடிப்படையில் முதல் சட்டமன்ற கூட்ட தொடரில் பேச அனுமதி வழங்கப்பட்டது.
கொங்கு மக்களை திமுக வஞ்சிக்கிறது என்ற குற்றசாட்டினை எதிர்க்கட்சிகள் வைக்க அதற்கு திமுகவிற்கு ஆதரவாக சட்டசபையில் பேச ஈஸ்வரனை பேச அனுமதி அளித்து இருப்பதாக கூறப்பட்ட நிலையில், ஈஸ்வரனின் பேச்சு கடும் அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது, ஜெய் ஹிந்த் என்ற வார்த்தை ஆளுநர் உரையில் இடம்பெறாததால் தமிழகம் தலை நிமிர்ந்து விட்டது என தெரிவித்தார்.
இது சுதந்திர போராட்ட தியாகிகள், இந்தியாவின் இறையான்மை மீது நம்பிக்கை கொண்ட பொதுமக்கள், இராணுவ வீரர்கள், அரசியல் இயக்கங்கள் என பல தரப்பையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது, ஈஸ்வரனுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன, பாஜகவினர் வெளிப்படையாக கண்டனத்தை பதிவு செய்தனர், அண்ணாமலை ஈஸ்வரனின் பேச்சையும் அமைதி காத்த முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடு ஆகியவற்றை தேசிய ஊடகங்கள் மூலம் நாட்டு மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல..,
நிலைமை விஸ்வரூபம் அடைந்தது, தொடர் எதிர்ப்பை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் அதிகார பூர்வ பக்கத்தில் ஜெய் ஹிந்த் என பதிவு செய்ததுடன், அதை சொல்ல பெருமை படுகிறோம் என தெரிவித்தது, இப்படி எதிர்ப்பு வழுத்து கொண்டு இருக்க, நிலைமை கைமீறி சென்றுவிட்டது, குறிப்பாக இராணுவ வீரர்கள் ஈஸ்வரனுக்கு எதிர்ப்பை பதிவு செய்தனர், முதல்வர் முதல் பல்வேறு முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது நாங்கள் தான், ஜெய் ஹிந்த் சொல்லாதே என அவர்களிடம் சொல்லி பாருங்கள் என இராணுவ வீரர் ஒருவர் வீடியோ வெளியிட முதல்வர் அலுவலகமே மிரண்டுவிட்டது.
பாதுகாப்பிற்கு பங்கம் உண்டாக்கும் செயலாக கைமீறி போவதை அறிந்த முதல்வர் வட்டாரம் ஈஸ்வரனை தொடர்பு கொண்டு விளக்கம் கொடுக்க சொல்ல, அவரும் நான் ஜெய் ஹிந்த் என்ற நாட்டு பற்றிற்கு எதிரானவன் இல்லை, மொழி அடிப்படையில் சொன்னதாக தெரிவித்தார், இருப்பினும் ஈஸ்வரனை தமிழக மக்கள் விடுவதாக இல்லை, குறிப்பாக நாட்டு பற்று மிக்க கொங்கு மக்கள் விரட்டி அடித்து வருகின்றனர், அவர் செல்லும் இடங்களில் எதிர்ப்பை பதிவு செய்தும், ஈஸ்வரனின் சமுக வலைத்தள பக்கங்களில் ஜெய்ஹிந்த் என பதிவு செய்து எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
முன்பு இரண்டு அல்லது மூன்று கார்களில் தொகுதியில் வலம்வரும் ஈஸ்வரன் இப்போது கொங்கு மக்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து எதிர்ப்பு வருவதால் 10 ற்கும் அதிகமான கார்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்திய அளவில் ஈஸ்வரன் பேசிய பேச்சு அதிர்வலைகளை உண்டாக்கிய நிலையில் விரைவில் ஈஸ்வரன் வாழ்க பாரதம் என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட தயாராகி வருவதாக கூறப்படுகிறது.