1952 ம் ஆண்டு சட்டப்படி உருவாக்கப்பட்ட "திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை" உடனடியாக (with immediate effect) நீக்கி ஏப்ரல் 6 அன்று உத்தரவிட்டது மத்திய சட்ட அமைச்சகம். இதன் காரணமாக, இனி திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (Central Board of Film Certification CBFC) முடிவுகளை எதிர்த்து தீர்ப்பாயம் செல்ல முடியாது. நீதிமன்றம் தான் செல்ல வேண்டும்.
மேலும் திரைப்பட சட்ட திருத்தம் 2021 (Cinematograph Amendment Bill 2021) மக்கள் கருத்துக்களை வரவேற்று செய்தி வெளியிட்டது அதன்படி ஜூலை 2 க்குள் கருத்துக்களை பகிரலாம். இந்த சட்ட திருத்தப்படி, திரைப்படங்களுக்கு CBFC கொடுக்கும் சான்றிதழ்களை மறு ஆய்வு செய்யவும், திருத்தம் செய்யும் அதிகாரங்களும் (revisionary powers) மத்திய அரசுக்கு வழங்கப்படுகிறது.
இந்திய திரைப்படங்கள் - குறிப்பாக பாலிவுட், கோலிவுட் படங்கள் - வரலாற்றை திரித்து, இந்துக்களை வில்லன்கள் போலவும் 'மற்ற'வர்களை யோக்கியர்கள் போலவும் காட்டுவது வழக்கமாக உள்ளது. சமீபத்தில் வித்யா பாலன் நடித்து அமேசான் பிரைமில் வெளியான - உண்மை கதையை அடிப்படையாக கொண்ட - ஷெர்னியில், உண்மையான வில்லன் ஒரு முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் . ஆனால், ஷெர்னியில் வில்லன் இந்து. உண்மை கதையில் ஹீரோ ஒரு இந்து பெண். ஆனால், ஷெர்னியில் ஹீரோ (பெண்ணின்) இந்து அடையாளங்களை அழித்து செக்குலராக காட்டியிருக்கிறார்கள்.
இது ஒரு உதாரணம் தான். இது போல பல நூற்றுக்கணக்கான உதாரணங்களை சொல்லலாம். CBFCயில் அமர்ந்திருக்கும் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் சான்றிதழ் கொடுத்ததும் அவை திரைக்கு வருகின்றன. இந்த CBFC முடிவை எதிர்க்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை என நீதிமன்றங்கள் தீர்ப்பு கொடுத்திருந்தன. இதன் மூலம் உண்மைக்கு புறம்பான தகவல் இடம்பெற்று இருந்தாலும் மேலும் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு இருந்தாலும் அதனை தடை செய்ய மத்திய அரசால் முடியவில்லை.
ஆனால் புதிய சட்டம் மூலம் இனி இந்துக்களை குறிவைத்து தாக்கும் படங்கள் எடுப்பதும், வரலாற்றை திரித்து படங்கள் எடுப்பதும், அமராவதி போன்ற வரலாற்று திரிபு படங்கள் - அவற்றின் காரணமாக கலவரங்கள் - அரசு ஒன்றும் செய்ய முடியாத நிலை - போன்றவையும் இனி 100 % இருக்காது காரணம்,CBFC சான்றிதழ் கொடுத்தாலும், மத்திய அரசுக்கு புகாரளித்து அப்படங்களை சரிபார்க்க சொல்லலாம்.
இனி இந்திய திரைப்படங்களில் இந்தியாவின் ஒருமைபாட்டிற்கு எதிராக கருத்துக்கள் இடம்பெறுவது 100% தடை படும் அதையும் மீறி திரைப்படம் எடுத்தால் அந்த திரைப்படம் 100% திரைக்கு வராது, இதன் மூலம் திரையில் போராளிகளாக வலம் வரும் நடிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.