Tamilnadu

"அவன் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறான்" மாரிதாஸ் கைதிற்கு எதிராக சீமான் சொல்லிய மூன்று விஷயம் !

maridhas and seman
maridhas and seman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுத்தாளர் மாரிதாஸ் கைதிற்கு எதிராக தனது கருத்தினை பதிவு செய்துள்ளார், மாரிதாஸ் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்கிறான், திமுகவை எதிர்பவர்களை கைது செய்வது கருத்து சுதந்திரத்திற்கு கொடுக்கப்பட்ட அடி என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.


இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருப்பதாவது,  மாரிதாஸ் கருத்து கோட்பாடுகளில் முழுமையாக முரண்படுகிறேன். ஆனால், தம்பி மாரிதாஸின் கைதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். ஒரு ஜனநாயக நாட்டில் எதையுமே பேசக்கூடாது என்று மாரிதாஸ் சார்ந்திருக்கும் பாஜக சொல்வதையும் ஏற்க முடியாது. திமுக எடுக்கும் முடிவையும் ஆதரிக்க முடியாது. கருத்து சுதந்திரத்திற்கு எதிராக கைது செய்தால் நாங்கள் என்னதான் பேசுவது?

அதேபோல, தம்பி சாட்டை துரைமுருகனையும் வேண்டுமென்றே கைது செய்தார்கள். என்னிடம் ’உங்கக் கூடவே இருக்கார். எங்களுக்கு நெருக்கடி’ என்றார்கள் காவல்துறையினர். ’நானே அனுப்புகிறேன்’ என்று சரணடைய வைத்தேன். ஆனால், இந்த அரசு எவ்வளவு வன்மமாக இருக்கிறது என்பது அவனை நான் பிணையில் எடுக்க போராடும்போதுதான் தெரிந்தது. மாரிதாஸுக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அதேபோல, முதுகுளத்தூர் மணிகண்டன் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்ததில் தம்பி மாரிதாஸின் கருத்தை நானும் ஏற்கிறேன். நானும் தமிழக அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தேன். இதுமட்டுமல்ல, மீனவர் ராஜ்கிரண் உயிரிழப்புக்கும் தமிழக முதல்வர் மெளனமாகத்தான் இருந்தார். அவர் எதிர்கட்சியாக இருக்கும்போது பேசிய பேச்சுக்கும், முதல்வராக மாறியபின்பு பேசும் பேச்சுக்கும் நிறைய வேறுபாடுகளைப் பார்க்க முடிகிறது”.

மாரிதாஸ் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு உண்மையாக இருக்கிறார். அவ்வளவுதான். அவர் என்னையும்தான் ரொம்ப விமர்சித்திருக்கிறார். நான் ஒன்றுமே சொல்லவில்லையே? நான் எங்க அம்மா, அப்பாவிடம் அன்பாக இருப்பதில் நீங்க எப்படி குறை சொல்வீங்க? அதுபோல்தான், மாரிதாஸ் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு விசுவாசமாக இருக்கிறார். அதற்காக, அவரை கைது செய்வது தவறு. எங்களின் தமிழ் தேசிய அரசியலையுமே விமர்சிக்க ஆள் இருக்கிறார்கள். ஆனால், அதற்கு காரணம் ’சீமான் பின்னாடி இவ்ளோ பேர் போறாங்களே’ என்பதுதான்.

’நாங்க கருத்து சுதந்திரத்தை மதிக்கிறோம், அது பண்ணுவோம், இது பண்ணுவோம்’ என்று சொல்றார் முதல்வர் ஸ்டாலின். உண்மையிலேயே, கருத்து சுதந்திரத்தை மதிக்கிறாங்கன்னா என் பேட்டியை எடுத்து அவங்க டிவியில் போடுவாங்களா? அரசு என்பது அடிப்படை உரிமைகளை காப்பதற்காகத்தான் இருக்கவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார் சீமான்.

தொடர்ச்சியாக தமிழகத்தில் கிஷோர் கே சுவாமி, சாட்டை துரைமுருகன், கல்யாண ராமன், தற்போது மாரிதாஸ் என திமுகவிற்கு எதிர் அரசியல் நிலைப்பாடு கொண்டவர்களை கைது செய்யும் தமிழக காவல்துறை, தமிழக காவல்துறையை விமர்சனம் செய்த விசிக வன்னியரசு, இந்திய இராணுவம் குறித்தும் பிரதமர் குறித்தும் மிகவும் அவதூறாக பேசிய சுந்தரவள்ளி மேலும் ஆபாசமாக பேசிவரும் பிலிப் பிலிப் என்ற யூடுப்பர்ஸ் போன்றோரை கைது செய்யாமல் வேடிக்கை பார்ப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.