Tamilnadu

மாரிதாஸ் கைதிற்கான காரணம் வெளியானது மதுரையில் கடும் பதற்றம்!

maridhas
maridhas

 மதுரையில் பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் காவல்துறையினரால் கைது செய்யபட்ட விவகாரம் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது,மதுரை நகர் முழுவதும் பாஜகவினர் குவிந்து வருவதாலும் மாரிதாஸிற்கு ஆதரவாக தேவர் அமைப்புகளும் குவிந்து வருவதால் கடும் பதற்றம் உண்டாகியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த மாணவன் மணிகண்டன் மர்மமான முறையில் மரணம் அடைந்தது பெரும் கொந்தளிப்பை உண்டாக்கிய நிலையில் மாரிதாஸ் மணிகண்டனுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டார், இந்த சூழலில் மணிகண்டனுக்கு ஆதரவாக வெளியிட்ட காரணத்தால் தமிழக காவல்துறை மாரிதாஸை கைது செய்து அழைத்து சென்று இருப்பதாக கூறப்படுகிறது.


சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்ததாக கூறி மாரிதாசை, மதுரை புதூர் பகுதியில் உள்ள மாரிதாஸ் வீட்டில் வைத்து காவல்துறையினர் சற்று முன்னர் கைது செய்துள்ளனர்.  மாரிதாஸ் ஏற்கெனவெ தனியார் தொலைக்காட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள் மீது குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் முன் வைத்தவர் என்பதும், அதன் காரணமாக அவர்கள் பணி விலக்கம் செய்யப்பட்டதும், விலகியதும் குறிப்பிடத்தக்கது.


இதே போன்று மணிகண்டன் மர்ம மரணம் தொடர்பாக மாரிதாஸ் வெளியிட்ட வீடியோ காவல்துறையினருக்கும் ஆளும் கட்சிக்கும் எதிராக அமையலாம் என்பதால் காவல்துறை அவரை கைது செய்ய திட்டமிட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது, அதே சமயத்தில், மாரிதாசை கைது செய்ய உள்ளதாக தகவல் கிடைத்தவுடன் பா.ஜ.க.வினரும், மாரிதாசின் ஆதரவாளர்களும் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். தற்போது, பா.ஜ.க.வின் மதுரை மாநகர் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சரவணன் உள்பட பலரும் காவல்துறையினருடன் உடன் சென்றுள்ளனர்.

இதனால், அந்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டதுதி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து தொடர்ந்து கிஷோர், கல்யாண் ராமன்,சாட்டை துரைமுருகன் என திமுகவிற்கு எதிராக பேசும் நபர்கள் திட்டமிட்டு கைது செய்யப்படுவதும், அதே நேரத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக பாஜக அதிமுக மீது சர்ச்சைக்குரிய வகையில் பேசும் பல நபர்களை கைது செய்யாமல் வேடிக்கை பார்ப்பதாகவும் ஆளும் அரசின் காவல்துறை மீது குற்றசாட்டுகள் அதிகரித்து காணப்படுகின்றன.

மணிகண்டனுக்கு ஆதரவாக வெளியிட்ட வீடியோ விவகாரத்தை முன்வைத்து தமிழக காவல்துறை மாரிதாஸை கைது செய்து அழைத்து சென்றுள்ளதாகவும் ஆனால் மாரிதாஸ் காவல்துறை வாகனத்தில் ஏறாமல் சொந்த வாகனத்தில் ஏறி சென்றதும் குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் மாரிதாசிற்கு ஆதரவாக பல அமைப்புகள் மதுரையில் திரண்டு வருவதால் பதற்றமான சூழல் காணப்படுகிறது.