Tamilnadu

அடித்தது ஜாக்பாட்..! அதிர்ஷ்டசாலியானார் "ஒத்த ஓட்டுக்காரர் கார்த்திக்"! அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

annamalai
annamalai

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. அதில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்று இருக்கின்றது. இப்படி ஒரு சமயத்தில் கோவையில் குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9வது வார்டில் சுயேச்சையாக நின்ற பாஜகவை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஒரே ஒரு வாக்கு பெற்று உள்ளார். இவருக்கு அடுத்ததாக தேமுதிக வேட்பாளர் இரண்டு ஓட்டுகளை பெற்று உள்ளார். இதனை கிண்டல் செய்யும் விதமாக திமுகவினரும் பாஜகவிற்கு எதிரானவர்களும் மீம்ஸ் வெளியீட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.


இன்றைய நாள் முழுதும் வெற்றி பெற்றவர்களை காட்டிலும் சமூகவலைத்தளத்தில் ஒரு ஓட்டு வாங்கிய கார்த்திக் தான் அதிக இடம் பிடித்தார். அதில் குறிப்பாக கார்த்திக் வீட்டில் நான்கு பேர் இருந்தும் ஒருத்தர் கூடவா அவருக்கு ஓட்டு போடவில்லை என விமர்சனம் எழுந்தது. இப்படி ஒரு தருணத்தில் இது குறித்து விளக்கம் அளித்த கார்த்திக், "என் குடும்ப உறுப்பினர்களுக்கு 4 வது வார்டில் தான் வாக்கு உள்ளது. நான் போட்டியிட்ட 9வது வார்டில் இல்லை என குறிப்பிட்டு இருக்கிறார். எனவே தொடர்ந்து இதுபோன்று தவறான கருத்துக்களை வெளியிடாதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒன்பதாவது வார்டை பொறுத்தவரை மொத்தம் உள்ள 1551 வாக்குகள் உள்ளன. இதில் 913 வாக்குகள் பதிவாகியது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக அருள்ராஜ் முன்னிலை வகித்து வந்தார். கடைசியில்  387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்ததாக சுயேட்சை வேட்பாளர் ஜெயராஜ் 240 வாக்குகளை பெற்றார். தேமுதிக வேட்பாளர் 2 வாக்குகளையும் கார்த்திக் ஒரு வாக்கையும் பெற்றார். தற்போது "ஒத்த ஓட்டு பாஜக" என ஹேஷ் டேக் போட்டு ட்ரெண்ட் செய்து வரும் நிலையில் ஒரே இரவில் ஒபாமா ஆன கதையாக ஒரே நாளில் உலக பேமஸ் ஆக மாறி இருக்கிறார் கார்த்திக்.

அதே வேளையில் ஒரு பக்கம் கிண்டல் கேலியுமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. காரணம்... தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள்  "ஒரு ஓட்டு பெற்ற கார்த்திக்கிற்கு எதிர்காலத்தில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும்" என குறிப்பிட்டு உள்ளார். இதன்மூலம் ஒரு ஓட்டை பெற்று  வெற்றி பெறவில்லை என்றாலும் மிகப்பெரிய வாய்ப்பு கார்த்திக்கிற்கு கிடைத்துள்ளதால் ஒரு அதிர்ஷ்டசாலி  நபராக உருவாக்கி இருக்கிறார் கார்த்திக்.