மக்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள நடிகர் சூர்யா தற்போது, சைலண்டா ஒரு வேலையை செய்து முடித்து இருக்கிறார். ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன், வாடிவாசல், சிறுத்தை சிவா இயக்கும் படம் என தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.
தன்னுடைய 2 டி நிறுவனத்தின் மூலம் பல்வேறு படங்களை இயக்கி வரும் சூர்யா, கார்த்தி, ஜோதிகா மற்றும் மற்ற பிரபல நடிகர்களையும் வைத்து தொடர்ந்து படம் எடுத்து வருகிறார். அந்த வகையில் கையில் உள்ள 4 படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராக உள்ளன
இந்த வரிசையில் ரம்யா பாண்டியன் வாணி போஜன் நடித்த ராமே ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் என்ற திரைப்படம் கடந்த செபதம்பார் மாதம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த படம் 2015 ம் ஆண்டு மராத்தியில் வெளிவந்த Rangaa Patangaa படத்தின் காப்பி என கண்டறியப்பட்டு பிரச்சனை எழுந்தது. அதாவது Rangaa Patangaa படத்தில் சில மாற்றங்களை செய்து , அப்படியே படம் எடுத்து உள்ளனர்.
ஆனால் கதை திருட்டு விஷயம் பெரிய அளவுக்கு செல்ல இருந்த நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களுக்கு போன் செய்து பேசி உள்ளார் சூரியா. மேலும் ராமே ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் பட இயக்குனரிடம் செம்ம கடுப்பாகி திட்டி உள்ளார். அதன் பிறகு கதை உரிமையாளரிடம் சமரசமாக பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களுக்கு கொடுத்து செட்டில் செய்து உள்ளார் சூர்யா.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கும் தருணத்தில், அதிமுக ஆட்சியின் போது நீட்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த சூர்யாவுக்கும் , திமுக ஆட்சியில் சற்று பவ்யமாக பீல் பண்ணி பேசியதும் கூட சர்ச்சையானது. இந்த கதை திருட்டு விவகாரத்தில் சைலண்டா இருந்தா, நம்ம பேரை டேமேஜ் செய்து விடுவார்கள் என முன்கொடியே உஷாராகி உள்ளார் சூர்யா. அதன் விளைவாக தான் கதை திருட்டு பிரச்சனைக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சூர்யா.