Tamilnadu

என்ன பெரிய பெண்ணியம் கேட் வால்க் கீழே மார்க் போடுறது..வெளுத்து எடுத்த இஸ்லாமியர் நேரடி சவால் !

arulmozli Islamic fundamentalist and sundharavali
arulmozli Islamic fundamentalist and sundharavali

இந்து அமைப்புகள் அல்லது பாஜகவினர் என யாராவது பெண்ணியம் குறித்து பேசினால் முதலாவதாக வந்து கருத்து தெரிவிப்பவர்கள் பட்டியலில் இருப்பவர்கள் பெரியாரியஸ்ட்கள் குறிப்பாக அருள்மொழி, சுந்தரவள்ளி போன்றோர் மேடை மேடையாக சென்று பெண்ணியம் பேசி வருபவர்கள். இந்த சூழலில் இஸ்லாமிய அடைப்படைவாதி ஒருவர் பெரியாரிஸ்ட்கள் அம்பேத்கரிஸ்டகள் போன்றவர்களுக்கு வெளிப்படையாக சவால் விடுத்துள்ளார் அதில் பெரியாரிஸ்ட் மற்றும் அம்பேத்கரிஸ்ட் போன்றவற்றில் பெண்ணியமே இல்லை என குறிப்பிட்டுள்ளார், குறிப்பாக பெரியாரிஸ்ட்கள் சொல்லும் பெண்ணியம் என்பது மேற்கத்திய கலாச்சாரம் என்றும் அது கேட் வால்க் தொடங்கி விபச்சாரம் வரை கொண்டு செல்கிறது என வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.


மேலும் வாருங்கள் விவாதிப்போம் எனவும் அழைப்பு விடுத்துள்ளார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, வழக்கமாக இந்து அமைப்புகள் கலாச்சாரம் குறித்து பேசினால் பெண்ணியம் குறித்து வகுப்பு எடுக்கும் சுந்தரவள்ளி, அருள்மொழி போன்றோர் இதற்கு கருத்து தெரிவிப்பார்களா? அல்லது வாயை மூடி மவுனமாக வேடிக்கை பார்ப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒருவர் வெளிப்படையாக பெரியார் கற்று கொடுத்த பெண்ணியம் என்பது மேற்கத்திய கலாச்சாரத்திற்கு உள்ளாக்கப்பட்டு விபச்சாரத்திற்கு தள்ளுவது என்பது குறிப்பிட்ட பிறகும் பெரியாரிட்களோ அம்பேத்கரிஸ்ட்களோ வாய் திறக்காமல் இருந்தால் அது அவர் வைத்த குற்றசாட்டை ஆமோதிக்கும் விதமாக அமைந்து விடும் எனவும் பலர்  கருத்து தெரிவித்து வருகின்றனர். வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது