தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற முடியாது என எதிர்க்கட்சிகள் தொடங்கிய சினிமா பிரபலங்கள் வரை பலர் விமர்சனம் செய்து வந்தனர், இந்நிலையில் பாஜக தமிழகத்தில் 4 இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள சட்டமன்றதில் பாஜகவும் பங்கு பெறவுள்ளது.
இந்நிலையில் பாஜகவை விமர்சனம் செய்வதையே ஊடகத்தில் பொழுது போக்காக ஒரு காலத்தில் செயல்பட்டவர் மயில்சாமி, ஒரு கட்டத்தில் இந்தியாவை திராவிட நாடு என பிரிக்கவேண்டும் என்றெல்லாம் பேசி மிகுந்த எதிர்ப்பை பதிவு செய்தார், நோட்டாவை தாண்டாத பாஜக எங்களை ஆள நினைக்கலாமா எனவும் குறிப்பிட்டு இருந்தார் இந்நிலையில் நடிகர் மயில்சாமி பாஜகவை வீழ்த்துவேன் என தேர்தலில் போட்டியிட்டார்.
சென்னையில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார், திமுக அதிமுக, நாம் தமிழர் மக்கள் நீதிமய்யம் என 5 முனை போட்டி நிலவியது, இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் பிரபாகர ராஜா 74351 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், அவருக்கு அடுத்து அதிமுக வேட்பாளர் விருகை ரவி 55984 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
இதே தொகுதியில் போட்டியிட்ட மயில்சாமி நோட்டாவை விட குறைவாக 1440 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார், இந்த தொகுதியில் நோட்டா 1563 வாக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது, பாஜகவை வீழ்த்துவேன் என கூறிய மயில்சாமி நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.
மயில்சாமி நிலைமையாவது பரவாயில்லை நடிகர் மன்சூர் அலிகான் நிலைமையை பார்த்து ஊரே கைகொட்டி சிரிக்கும் நிலை உண்டாகியுள்ளது, தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மன்சூர் அலிகான் வெறும் 426 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். மன்சூர் அலிகான் பேசிய பேச்சிற்கும் அவர் பெற்ற வாக்குகளுக்கும் சம்மந்தமே இல்லை என கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
ஆயிரம் ஓட்டுகள் கூட வாங்க முடியாத நபர்கள் எல்லாம் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்யும் பிரதமரையும் இந்தியாவில் 18 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை விமர்சனம் செய்கிறார்களே என்ற விமர்சனங்களும் அதிகமாக காணப்படுகிறது.